இளம்பெண்ணுடன் நடுரோட்டில் முகத்தை மூடிக்கொண்டு ஓட்டம் பிடித்த நடிகர் விஷால்… வைரல் வீடியோ சர்ச்சைக்கு விளக்கமளித்து முற்றுப்புள்ளி…

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின்  முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி கே ரெட்டியின் மகனான விஷால் இயக்குனராகும் கனவோடு திரை உலகில் நுழைந்தவர். ‘வேதம்’ படத்தில் நடிகரும்  இயக்குனருமான அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். 2004 இல் வெளியான ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவருடைய முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து ‘சண்டக்கோழி’ திரைப்படம் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் வெற்றி அடைந்தது.

   

இவர் நடிப்பில் வெளியான திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற ஆக்சன் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து நடிகர் விஷால் தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்தார். ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் காதலிக்கும் பிளேபாயாக கலக்கியிருந்தார். இவர் நடிப்பையும் தாண்டி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார். ‘துப்பறிவாளன் 2’ படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடியை தாண்டி வசூலில் சாதனை படைத்தது.

இவர் நடிகர் சங்கத்தின் செயலாளர் என்பதும் நாம் அறிந்ததே. இப்படி தமிழ் சினிமாவில் தனது திறமையினை பல்வேறு துறைகளில் வெளிப்படுத்தி வரும் நடிகர் விஷாலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அனுஷா என்பவருடன் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திடீரென இத்திருமணம் நின்றுவிட்டது. ஏன் என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதைத்தொடர்ந்து அவர் பிரபல நடிகை அபிநயாவை காதலித்து வருவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காக அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் நடிகர் விஷால். அங்குள்ள நியூயார் நகரத்தில் இளம்பெண் ஒருவருடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது ஒருவர் தங்களை வீடியோ எடுப்பதை பார்த்து நடிகர் விஷால் முகத்தை மறைத்துக்கொண்டு அந்த பெண் உடன் தலைதெறிக்க ஓடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் அந்த வீடியோ ‘சும்மா  Fun-க்காக தானே எடுத்து வெளியிட்டது என்றும், அந்த பெண் தனது சிஸ்டர் என்றும் ‘ விஷாலே விளக்கமளித்துள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ…