#image_title
தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் தற்போது ரத்னம் திரைப்படம் உருவாகி இருக்கின்றது. இப்படத்தை ஹரி இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி படம் ரிலீஸ்-ஆக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைத்துள்ள இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கின்றார். முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
படம் விரைவில் ரிலீஸ்-ஆக உள்ளதால் ப்ரோமோஷன் பணிகளில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார்கள் படக்குழுவினர். நேற்று முன்தினம் இப்படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றது. அப்போது பல செய்தியாளர்களின் கேள்விக்கு விஷால் பதிலளித்து இருந்தார். திருமணம் குறித்த கேள்விக்கும் நடிகர் விஷால் பதில் அளித்துள்ளார். எப்போ கல்யாணம் பண்ணிக்க போறேன்னு எனது பெற்றோர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.
முதலில் ஆர்யாவுக்கு திருமணம் நடக்கட்டும் என்று கூறினேன். அவன் திருமணம் செய்து குழந்தையை பெற்று விட்டான். பின்னர் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்டி முடிந்ததும் திருமணம் என்று கூறியிருக்கிறேன். திருமணம் என்பது சாதாரண விஷயம் கிடையாது. நான் திருமணத்தை தள்ளிப் போடுவதால் எனக்கு அதன் மீது வெறுப்பு இருக்கின்றது என அர்த்தம் இல்லை.
சினிமாவில் ஏகப்பட்ட பிரபலங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்திக் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இந்த ஆண்டிற்குள் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டால், நிச்சயம் இந்த ஆண்டு இறுதிக்குள் எனது திருமணமும் நடைபெறும். மணப்பெண் யார் என்று கேட்டால் எனக்கே தெரியாது. எனக்காக ஒருத்தி கண்டிப்பாக இருப்பாள் என்று விஷால் கூறியிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்…