தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விஷால். செல்லமே திரைப்படம் மூலமாக திரை உலகில் நடிகராக அறிமுகமான இவ்வாறு சண்டக்கோழி மற்றும் தாமிரபரணி என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்தார். நடிகர் சங்க பொதுச் செயலாளர் ஆகவும் இருக்கும் விஷால் படு ஆக்டிவாக இயங்கக் கூடியவர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள மதகஜராஜா திரைப்படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் சென்னையில் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை நேற்று நடைபெற்றது. அதில் நடிகர் விஷால், இயக்குனர் சுந்தர் சி மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளனி டிடி தொகுத்து வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் விஷாலிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்து விஷால் பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய கைகள் பயங்கரமாக நடுங்கியது. மேடையில் பேசிய விஷால், இந்த வருடம் எனக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்காமல் போகலாம். ஆனால் சிறந்த பாடலுக்கான விருது கிடைக்கும். படப்பிடிப்பு சமயத்தில் விஜய் ஆண்டனி என்னிடம் வந்து, எனக்கு ஒரு பாடகர் தேவை.

அவர் இனிமேல் பாடவே கூடாது, அப்படி ஒரு பாடகர் நீங்கள் தான் என விஜய் ஆண்டனி தன்னிடம் கூறியதாக விஷால் மேடையில் கூறினார். அப்போது விஷால் கைகள் நடுங்கியது. குரலும் நடுக்கத்துடன் தான் இருந்தது. ஆனால் விஷால் இப்படி காணப்பட்டதற்கான காரணத்தை அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினி டிடி கூறியுள்ளார். அதாவது, விஷாலுக்கு அதிகமான காய்ச்சல் இருந்ததால் அவர் இவ்வாறு காணப்பட்டதாக அவர் கூறியுள்ளார். தற்போது விஷாலின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வர ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
Take care vishal naa y hand ivolo nadungudhu?🥲 #MadhaGajaRaja pic.twitter.com/LLHjhDFKHp
— Sanjayrant/alterego (@as_rantts) January 5, 2025
