தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் விஷால். தற்பொழுது விஷால் மற்றும் SJ.சூர்யா இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விஷால் மற்றும் SJ.சூர்யா உடன் இணைந்து ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி இன்னும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரிக்க, 1960களில் நடைபெறும் கதை களத்தை மையமாக கொண்ட கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகி இருக்கிறது. இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.தற்பொழுது இத்திரைப்படத்தின் டப்பிங் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீசாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் நடிகர் விஷால். இதற்காக அவர் Foodies findings என்ற பிரபல யூ டூபருடன் சேர்ந்து படத்தினை ப்ரோமோஷன் செய்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாக ரசிகர்கள் ‘பட ப்ரோமொஷனுக்காக இப்படி இறங்கிடீங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒரு குரங்கு, மூன்று மாதக் குழந்தையைத் தனது குட்டி என நினைத்து நீண்ட நேரம்…
கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக்…
பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…