Actor Vishal

ஜனநாயகன் பட விவகாரம்… சென்சார் போர்டு நடவடிக்கை – வெளிப்படையாக விமர்சனம் செய்த நடிகர் விஷால்!

By Elango on மாசி 24, 2026

Spread the love

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் கூறியதாவது, பிரச்சனை என்று வரும்போது ஒருவர் மட்டும் குரல் கொடுப்பதால் எந்த பலனும் இல்லை. தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மொத்தம் 1,519 பேர் இருக்கிறார்கள். அனைவரும் ஒன்றாக சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். ஜனநாயகன் திரைப்பட விவகாரம் கோர்ட் விசாரணையில் இருக்கும்போது தயாரிப்பாளர் சங்கம் அதில் தலையிட முடியாது. கோர்ட்டில் வழக்கு நடக்கும் போது நாம் இதில் என்ன செய்ய முடியும்?

சென்சார் வாரியத்தில் 4 அல்லது 5 பேர் உட்கார்ந்து கொண்டு கோடிக்கணக்கான மக்களுக்காக எடுக்கப்படும் படத்தில் எதை வைக்க வேண்டும்? எதை நீக்க வேண்டும் என முடிவு செய்கிறார்கள். சத்தியமாக சொன்னால் அதில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை. ஆனால் அதுதான் விதிமுறை என்பதால் அதன்படி நாம் நடந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் விஷால் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.