Connect with us

CINEMA

மது பிரியர்களை டாஸ்மார்க்கில் வாங்கவிடாமல் விரட்டியடித்த நடிகர் விஷால். வைரலான வீடியோ

நடிகர் விஷால் டாஸ் மார்க்கில் மது வாங்க வரிசையில் நிற்ப்பவர்களை  விரட்டி அடிப்பது போன்ற வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில்  வைரளாகி  வருகிறது.  தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான  ஜி கே. ரெட்டியின் விஷால். இவர்  கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இது இவருக்கு சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து அவர் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

   

சமீபத்தில் அதிக் ரவிச்சந்தரன்  இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்தில்  நடித்திருந்தார்.இதில் அவர் முதல் முறையாக  இரட்டை வேடத்தில்  நடித்திருந்தது குறிப்பிடதக்கது. இப்படத்தில்  இவருக்கும் எஸ் .ஜே . சூர்யாவிற்கும் இடையிளான நட்பு, துரோகம் இவை நகைச்சுவை கலந்து காட்டப்பட்டிருந்தது. இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

இதற்கிடையில் நடிகர் விஷால் பற்றி அவ்வப்போது ஏதாவது ஒரு  வீடியோ வெளியாகி வைரலாகுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. சமீபத்தில் அவர் அமெரிக்காவில் ஒரு பெண்ணுடன் சுற்றிவரும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியது. அதற்க்கு பதிலளித்த விஷால் அது  ஒரு பிரான்க் வீடியோ என்றும்  தனது கஷின்களுடன்  சேர்ந்து அவர் எடுத்த வீடியோ என்றும்  விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில் விஷால் டாஸ்மார்க்கில் மது வாங்க  வரிசையில் நிற்ப்பவர்களை விரட்டி அடிப்பது போன்ற வீடியோ  ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது . ஆனால் அது நிஜமான வீடியோ இல்லை, இயக்குனர்  ஹரி இயக்கத்தில்  நடிகர் விஷால் நடித்துவரும் ரத்னம் படத்தின்  ஷுட்டிங்  வீடியோ தான் அது.

 

View this post on Instagram

 

A post shared by Cineulagam (@cineulagamweb)

author avatar
Deepika
Continue Reading

More in CINEMA

To Top