இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, செல்வராகவன், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் மார்க் ஆண்டனி. கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஷால் நடிப்பில் வெளியான பல படங்கள் படு தோல்வியை சந்தித்து வந்தன. இந்நிலையில், எப்படியாவது ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தாக வேண்டும் என்கிற முயற்சியில் தொடர்ந்து போராடி வந்தார் விஷால்.

இந்நிலையில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இதற்கு காரணம் இந்தப் படத்தில் விஷாலுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யாவை ஆதிக் ரவிச்சந்திரன் போட்டதுதான் என ஒட்டுமொத்த ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். ‘பொம்பள சோக்கு கேக்குதா பொம்பள சோக்கு கேக்குதா’ என்கிற காட்சிகள் மற்றும் பேருந்தில் சில்க் ஸ்மிதாவை பார்த்தவுடன் எஸ் ஜே சூர்யா ஆளே மாறி நடிக்கும் நடிப்பு எல்லாம் பார்த்த ரசிகர்கள் அவரை நடிப்பு அரக்கன் என பாராட்டி வருகின்றனர்.

சுமார் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட மார்க் ஆண்டனி திரைப்படம் முதல் நாளில் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளி, முதல் நாளிலேயே 6.50 கோடி ரூபாய் வசூலை எட்டியது. இதைத்தொடர்ந்து தற்பொழுது வரை வசூல் வேட்டை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இத்திரைப்படத்தின் success meet சமீபத்தில் நடந்துள்ளது.

இதில் மேடையில் பேசிய நடிகர் விஷால், ‘ நான் போற நடையில் வருது ஒரு தடை. அந்த தடைக்காக கிடைக்க கூடிய விடை. கிடைக்காத எடம் கடை. கிடைக்க கூடியது எனக்குள்ள இருக்க உள்ளாடை. அது underwear கிடையாது. எனக்குள்ள இருக்க self confidence. என் பின்னால் இருக்கும் குழந்தைகளின் படை மற்றும் ரசிகர்களின் படை’ என டி.ஆர் போல் அடுக்கு மொழியில் பேசி அசத்தியுள்ளார். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram
