மலையாள நடிகர் விநாயகன் ஹைதராபாத் விமான நிலைய கேட் ஊழியர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆர்.ஜி.ஐ விமான நிலைய போலீசாரால் நேற்று நகர காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் விநாயகன் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார் என்று போலீசார் தகவல் தெரிவித்தனர்.

கொச்சியில் இருந்து ஹைதராபாத் வழியாக கோவாவிற்கு சென்று கொண்டிருந்த நடிகர் விநாயகன் நேற்று மாலை விமான நிறுவனத்தின் கேட் ஊழியர்களிடம் தகராறு செய்து அநாகரிகமாக பேசியுள்ளார். அதன் பிறகு அவர் சிஐஎஸ் எப் வசம் ஒப்படைக்கப்பட்டார். பிறகு விநாயகன் கைது செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

கம்மட்டிபாடம் மற்றும் தொட்டப்பன் போன்ற மலையாள திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர் தான் விநாயகன். கொச்சியை சேர்ந்த இவர் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்த ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
