ஆடு 3 படத்தின் ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த விபத்தில் பிரபல வில்லன் நடிகர் விநாயகன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தோள்பட்டை எலும்பில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், 6 வாரங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளனர். நடிகர் விநாயகர் விஷாலின் திமிரு மற்றும் ரஜினியின் ஜெய்லர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லன் ரோலில் நடித்துள்ளார்.
