தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் வினய் ஆரம்ப காலத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னாலே உன்னாலே என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதில் குரு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் இவர் நடித்திருக்கின்றார். இருப்பினும் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வர முடியவில்லை. அதை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு 2017 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் என்கின்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.

தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வரும் வினய் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இவர் பிரபல நடிகையான விமலா ராமனை காதலித்து வருகின்றார். நடிகை விமலா ராமன் தமிழ் சினிமாவில் ராமன் தேடிய சீதை என்ற திரைப்படத்தின் மூலமாக பிரபலமான இவர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த பொய் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்த இவர் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கின்றார். இருப்பினும் ராமன் தேடிய சீதை திரைப்படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது.

கடைசியாக சுந்தர் சி யின் இருட்டு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிகை விமலா ராமனும் நடிகர் வினையும் பல ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள். இறுதியாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படியான நிலையில் வினய் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் எப்பவுமே ஸ்கிரிப்ட் படிக்கும் போது சிகரெட் அடிச்சுக்கிட்டே இருப்பேன். காலேஜ் படிக்கும் போது தான் இந்த பழக்கம் ஆரம்பிச்சது. கொஞ்சமா ஆரம்பிச்ச பழக்கம் நாளுக்கு நாள் அப்படியே அதிகமாயிருச்சு.

நிறைய பேரு என்ன பாத்து சொல்லி இருக்காங்க எதுக்கு இவ்வளவு ஸ்மோக் பண்ற என்று. ஆனா என்னால் அதை விடவே முடியல. மற்ற நாட்களில் 30 சிகரெட் வரை குடித்தால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் 60 சிகரெட் வரை குடிப்பேன். ஒருமுறை இதை விட்டரலாம் என்று முடிவெடுத்து இரண்டு நாள் குடிக்காமல் இருந்தேன். அதுக்கப்புறம் சிகரெட் அடிக்காம இருக்கவே முடியல. ஒரு கட்டத்துல மருத்துவர் ஆலோசனையை கேட்டு மூன்று வருஷம் சிகரெட் பிடிக்காமல் இருந்தேன். அதுக்கப்புறம் திரும்பவும் ஆரம்பிச்சிருச்சு. இப்போ அதை கொஞ்சம் கொஞ்சமா நிறுத்த முயற்சி எடுத்துட்டு இருக்கேன் என்று வினய் பேசியுள்ளார்.
