என் கல்யாணத்துல நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்.. அன்னைக்கு அது நடக்காம இருந்திருந்தா.. நடிகர் விமல் ஓபன் டாக்..!

By Nanthini on ஐப்பசி 29, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் நடிகர் விமல். இவருடைய நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றன. விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் விமல். அதே சமயம் அஜித் நடித்த கிரீடம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் விமல் துணை நடிகராக நடித்துள்ளார். பிறகு களவாணி திரைப்படம் மூலமாக தான் ஹீரோவாக அறிமுகமானார்.

   

தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே மாபெரும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக மாறினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் விமல் நடிப்பில் இறுதியாக சார் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையிலேயே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விமல் தன்னுடைய நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

   

 

அடுத்தடுத்து ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார். இந்த நிலையில் விமல் தனது திருமணம் பற்றி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், என்னுடைய திருமணம் மிகவும் சுவாரஸ்யமாக தான் நடந்தது. என்னுடைய கல்யாணம் சுவாமி மலையில தான் நடந்துச்சு. மொத்தமே என் கல்யாணத்துக்கு ஒரு பத்து பேர் தான் வந்தாங்க. என் மனைவி அக்ஷயா சென்னையில டாக்டருக்கு படிச்சிட்டு இருந்தாங்க. நான் விருதுநகரில் ஒரு படப்பிடிப்பில் இருந்தேன்.

அந்த சமயத்துல சில தவிர்க்க முடியாத பிரச்சனையால உடனே கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுச்சு. உடனே அவசர அவசரமாக கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனா இப்போ நினைச்சா கொஞ்சம் கவலையா தான் இருக்கு. வீட்ல சம்மதம் வாங்கிட்டு எல்லாரையும் வச்சு நல்லா கல்யாணம் பண்ணி இருக்கலாம் என்று தோணுது. இருந்தாலும் என்ன பண்ண முடியும் எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சு. அன்னைக்கு நான் அந்த தப்பை பண்ணாம இருந்திருந்தா எங்க கல்யாணம் பிரம்மாண்டமா நடந்திருக்கும் என்று தனது திருமணம் பற்றி விமல் வெளிப்படையாக பேசியுள்ளார்.