“என்னையெல்லாம் யாராலும் அழ வைக்கவே முடியாது”…. சிறை தண்டனை சர்ச்சைக்கு மத்தியில் விமல் கொடுத்த கூல் பதில்….!

By Nanthini on ஆடி 24, 2026

Spread the love

நடிகர் விமல் தயாரித்து நடித்த ‘மன்னர் வகையறா’ திரைப்படத்திற்காக ஃபைனான்சியர் கோபியிடம் பெறப்பட்ட ரூ. 4.5 கோடி கடனுக்காக வழங்கப்பட்ட காசோலை வங்கியில் பணமின்றி திரும்பியது. இது தொடர்பான காசோலை மோசடி வழக்கை விசாரித்த சென்னை 11-வது சிறு வழக்குகள் நீதிமன்ற நீதிபதி ஆர்த்தி, நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், கடன் தொகையை திருப்பிச் செலுத்தவும் உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்ட விமல் தரப்பு, சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தது. விமலின் மனுவை பரிசீலித்த நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதனால் அவர் உடனடி சிறை நடவடிக்கையிலிருந்து தற்காலிக நிவாரணம் பெற்றுள்ளார்.

   

இந்நிலையில், சென்னையில் உள்ள கமலா திரையரங்கிற்கு ‘ஜனநாயகன்’ திரைப்படம் பார்க்க வந்த நடிகர் விமலிடம், நிருபர்கள் இந்தச் செக் மோசடி வழக்கு மற்றும் தண்டனை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த விமல், சட்டப் போராட்டங்கள் ஒருபுறம் இருக்க, “மன்னர் வகையறா விவகாரம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது; என் மேல செக் மோசடி வழக்கா? அதெல்லாம் எனக்கு தெரியாது” என்று சிரித்தபடியே கூறிவிட்டு அங்கிருந்து நழுவிச் சென்றார்.

   

மேலும் நிருபர்களின் கேள்விகளுக்குத் தொடர்ந்து பதிலளித்த விமல், “என்னையெல்லாம் யாராலும் அழ வைக்கவே முடியாது” என்று கூலாகக் கூறிவிட்டுச் சென்றார். நீதிமன்றத் தண்டனை மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியிலும் அவர் மிகவும் சாதாரணமான பாணியில் அளித்த இந்தப் பதில் தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி இணையவாசிகளிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.