இந்த மூஞ்சிய வச்சி எவன் படம் எடுப்பானு என் wife-யே என்கிட்ட கேட்டாங்க.. விஜய் தம்பிங்கறதால மட்டும்.. மனம் திறந்த நடிகர் விக்ராந்த்..

By Sumathi

Updated on:

நடிகர் விஜய் சித்தி மகன்தான் நடிகர் விக்ராந்த். முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம், பாண்டியநாடு, கற்க கசடற, நெஞ்சத்தை கிள்ளாதே, எங்கள் ஆசான், கவண், தொண்டன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவர உள்ள லால் சலாம் படத்தில் ரஜினிக்கு மகனாக விக்ராந்த் நடித்திருக்கிறார்.

இந்த படத்துக்கு பிறகு விக்ராந்த் சினிமா பயணம் சிறப்பாக இருக்கும் என, ரஜினிகாந்த் நேரிலும், ஆடியோ லான்ச் விழாவிலும் பாராட்டியிருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் விக்ராந்த் கூறியதாவது, நான் என் நடிப்பு வாழ்க்கையை பாண்டியநாடு படத்துக்கு முன், பாண்டியநாடு படத்துக்கு பின் என்றுதான் பிரித்து பார்க்க வேண்டும்.

   

நடிகர் விஜய் பெரிய நடிகராக இருந்தாலும், நான் அவர் ஷூட்டிங் எல்லாம் போய் பார்த்தது இல்லை. ஒருமுறை ஒன்ஸ்மோர் ஷூட்டிங் நடந்த போது, சிவாஜி கணேசனை பார்த்து, அவருடன் ஒன்றாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்று என் அம்மா ஷூட்டிங் ஸ்பாட் அழைத்துச் சென்றார். எங்க பெரியப்பா எஸ்ஏ சந்திரசேகர்தான் அந்த படத்தின் டைரக்டர்தான். எனக்கு நடிப்பை விட கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் அதிலும் எனக்கு பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை.


தமிழ் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில் நடிகர் விஜய் தம்பி என்ற அடையாளத்துடன் வந்துவிட்டேன். ஆனால் எனக்கான இடத்தை அடைய எந்த முயற்சியும், உழைப்பையும் நான் செய்யவில்லை. ஆனால் பாண்டியநாடு படத்துக்கு பிறகுதான் என்னுடைய கேரியர் என்ன என்பது பற்றி நான் சிந்திக்க வேண்டிய நிலைக்கு வந்தேன். ஒருமுறை நான் தூங்கி எழுந்த பிறகு, என் மனைவி என்னை கண்ணாடி முன் நிற்க வைத்து, இப்படி ஒரு முகத்தை இந்த மாதிரி ஒரு ஆளை வைத்து, நானே படம் எடுக்க மாட்டேன்.

அப்புறம் எப்படி மற்றவர்கள் உன்னை வைத்து படம் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறாய் என்று கேட்டாள். நான் அப்போது அதிக குண்டாக, நிறைய நேரம் தூங்கிக்கொண்டு பொறுப்பற்றவனாக இருந்தேன். அதற்கு பிறகுதான் என்னை நான் மாற்றிக்கொள்ள ஆரம்பித்தேன். நிச்சயம், லால் சலாம் படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்துக்கு வருவேன், என்று கூறியிருக்கிறார் நடிகர் விக்ராந்த்.

author avatar
Sumathi