தமிழ் சினிமாவில் தன்னுடைய அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கின்றார். அதை தொடர்ந்து பார்வதி, பசுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சித்தா படத்தை இயக்கிய இயக்குனர் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்கின்றார். இப்படம் தொடர்பான தகவல் கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. அதை தொடர்ந்து எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
மேலும் கடந்த 17ஆம் தேதி விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. இப்படத்திற்கு ‘வீர தீர சூரன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம் துப்பாக்கியுடன் வரும் காட்சிகள் இடம் பெற்றன. இந்த போஸ்டர்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த போஸ்டரை சுட்டிக்காட்டி விக்ரம் மீது ஆன்லைனில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படத்தின் போஸ்டரில் விக்ரம் அருவாளுடன் இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன. விக்ரம் இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு சேர்க்கின்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் பதிவிடப்பட்டிருந்தது. இந்த புகாரை சென்னை கொருக்குப்பேட்டையில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் கொடுத்திருக்கின்றார்.