விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாகக் இருந்த விக்ரம்.. அடிபட்டு கிடைத்தவரை பார்த்து நக்கலடித்த பிரபல நடிகர்..

By vinoth on பிப்ரவரி 9, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விக்ரம். அவர் நடிப்பில் விரைவில் தங்கலான் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. மற்ற நடிகர்களைப் போல இல்லாமல் விக்ரம் தன்னுடைய கதாபாத்திரத்துக்காக அதிகமாக மெனக்கெடுபவர். கெட்டப்புகளை மாற்றி உடல் எடையை ஏற்றி இறக்கி வருடக்கணக்கில் அர்ப்பணிப்புடன் நடிப்பவர்.

அதனாலேயே அவரால் அதிக படங்களில் நடிக்க முடியாமல் போனது. தற்போது லீடிங் ஹீரோவாக இருந்தாலும் விக்ரம் இந்த நிலைக்கு மிக எளிதாக வரவில்லை. 1990 ஆம் ஆண்டே அறிமுகமானாலும் 1999 ஆம் ஆண்டு வெளியான சேது திரைப்படம்தான் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.

   

   

 

 

இடைப்பட்ட காலத்தில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் பல படங்களில் துண்டு துக்கடா வேடங்களில் நடித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் பல நடிகர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்து வந்தார். அஜித், பிரபுதேவா மற்றும் அப்பாஸ் போன்றவர்களின் ஆரம்பகால படங்களுக்கு விக்ரம்தான் டப்பிங் குரல் கொடுத்தார்.

இப்படி சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போராடி வந்த விக்ரம் ஒரு விபத்தில் சிக்கி ஒரு வருடத்துக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்தார். அப்போது அவரைப் பார்க்க வந்த அவரது உறவினர் அவருக்கு ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் “சரி விடு உனக்குன்னு ஒரு கால் முடியாதவன், கை முடியாதவன் போன்ற வேடம் கிடைக்காமலா போகும்” எனக் கூறியுள்ளார்.

இத்தனைக்கும் அந்த நடிகர் விக்ரம்முக்கு நெருங்கிய உறவினரும், சினிமாவில் முன்னணி நடிகராகவும் இருந்தவர்தான். அந்த நடிகரின் மகனும் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர்தான். ஆனால் அவரின் அந்த வார்த்தையை மனம் நொந்துபோன விக்ரம், எப்படியும் சினிமாவில் ஒரு ஹீரோவாக முன்னேறிவிட வேண்டும் என்ற உந்துதலில் கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்துள்ளார்.

அதன் பின்னர் காசி, பிதாமகன், சாமி, தூளி, அந்நியன், ராவணன், பொன்னியின் செல்வன் என பல வெற்றி படங்களில் நடித்து தனக்கான ஒரு இடத்தையும் ரசிகர்களையும் உருவாக்கி வைத்துள்ளார்.