Categories: சினிமா

23 சர்ஜரி, காலை எடுக்கணும்னு சொல்லிட்டாங்க.. 3 வருஷம் Bed-ல இருந்தேன்.. எமோஷனலாக பேசிய தங்கலான் நாயகன்..!!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் தங்கலான் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வருகிற 15-ஆம் தேதி தங்கலான் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. நேற்று தங்கலான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அந்த விழாவில் கலந்து கொண்ட விக்ரம் பேசியதாவது, நான் எட்டாவது படிக்கும்போது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அதுவரை முதல் மூன்று ரேங்குகளில் இருந்த நான் கடைசி மூன்று ரேங்க்குகள் எடுத்தேன். கல்லூரி வந்த பிறகு நடிப்பின் மீது இருந்த ஆர்வம் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஐஐடியில் பிளாக் காமெடி என்ற நாடகத்தில் ஹீரோவாக நடித்ததற்காக எனக்கு சிறந்த நடிகர் விருது கொடுத்தாங்க.

அன்றைய தினமே விபத்தில் காலை முறித்துக் கொண்டேன். டாக்டர் காலை வெட்டி எடுக்கணும்னு சொன்னாங்க. 23 சர்ஜரி செய்தார்கள். மூன்று வருஷம் பெட்ல தான் இருந்தேன். என்னால நடக்க கூட முடியாது. என் அம்மாவிடம் டாக்டர் இனிமேல் உங்க பையனால நடக்கவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க. நான் என் அம்மாவிடம் கட்டாயம் நான் நடப்பேன் என கூறினேன். எனக்குள்ள ஒரு வெறி இருந்துச்சு. எப்படியாவது நடிக்க வேண்டும்.

#image_title

ஏதாவது ஒரு சீன்லயாவது நான் வந்துடனும் அப்படின்னு எனக்கு ரொம்ப ஆசையா இருந்துச்சு. சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் பத்து வருஷம் நான் போராடிட்டு தான் இருந்தேன். என்னோட ஃபிரண்ட்ஸும் சினிமாவ விட்டுடுன்னு சொன்னாங்க. அப்படி விட்டு இருந்தா இன்னைக்கு உங்க முன்னாடி நின்னு நான் பேசிட்டு இருக்க மாட்டேன். ஒரு கனவை நோக்கி நமது சிந்தனை இருந்தால் நம்மால் நிச்சயம் அதை அடைய முடியும் என எமோஷனலாக பேசியுள்ளார்.

admin

Recent Posts

குடும்பத்தோடு வந்து ஓட்டு போட்ட நடிகர் கென் கருணாஸ்.. வைரலாகும் புகைப்படம்..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ன் ஒரு பகுதியாக, வளர்ந்து வரும் இளம் நடிகரும் பாடகருமான கென் கருணாஸ் தனது குடும்பத்துடன்…

7 minutes ago

காலையிலேயே ஜனநாயகக் கடமையை ஆற்றினார் சூப்பர்ஸ்டார்.. மகள் சௌந்தர்யாவுடன் வந்து வாக்களிப்பு..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஜனநாயகக் கடமையை…

10 minutes ago

“ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்” ஜனநாயகக் கடமையை முடித்துவிட்டு விஜய் சொன்ன அந்த ‘பவர்ஃபுல்’ மெசேஜ்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.…

14 minutes ago

“போட்ட பணம் டபுளா திரும்பி வரும்…” கோடிகளில் கூட சேமிக்கலாம்… நடுத்தர மக்களுக்கான அசத்தலான திட்டம்…!!

தபால் நிலையத்தின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க உதவும் ஒரு சிறந்த சேமிப்புத்…

33 minutes ago

மின்னஞ்சல் அனுப்பினாலே போதும்…! கைநிறைய சம்பளத்துடன் ஜிப்மர் மருத்துவமனையில் வேலை… விண்ணபிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ…!!

புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…

52 minutes ago

“கூல் டிரிங்க்ஸ் வேண்டாம்…” கோடை வெயிலில் குழந்தைகளைப் பாதுகாக்க மருத்துவர் சொல்லும் அட்வைஸ்…!!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள்…

1 மணத்தியாலம் ago