Categories: சினிமா

ஒரே தாலி செண்ட்டிமெண்ட் காட்சியை இரண்டு விதமாக படமாக்கிய பாரதிராஜா & பாக்யராஜ் – ரெண்டுமே ஹிட்!

Spread the love

அதற்கு முன்னர் தமிழ் சினிமாவில் நிலவி வந்த க்ளிஷேக்களை உடைத்து தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

அதைத் தொடர்ந்து ரத்தமும் சதையுமான பல கிராமியக் கதைகளை படமாக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் நெஞ்சில் குடிபுகுந்தார். கிராமத்துக் கதையைப் படமாக்கினாலும் பாரதிராஜா புதுமையான பல விஷயங்களை தன்னுடைய படத்தில் புகுத்தியவர்.

உதாரணமாக அவர் இயக்கி பாக்யராஜ், ரத், கவுண்டமணி உள்ளிட்டவர்கள் நடித்த புதிய வார்ப்புகள் படத்தில் ஹீரோயின் ரதிக்கு ஒரு கட்டத்தில் தாலி கட்டிவிடுவார் கவுண்டமணி. தாலி கட்டிவிட்டதால் இனிமேல் அவருக்கு மனைவியாக வாழவேண்டுமா என்ற கொதித்தெழும் ரதி தாலியை அறுத்து அவர் முகத்திலேயே வீசிவிடுவார். இது அதுவரை தமிழ் சினிமா பொத்தி பாதுகாத்து வந்த தாலி செண்ட்டிமெண்ட்டை உடைக்கும் விதமாக இருக்கும்.

ஆனால் இதே தாலி செண்ட்டிமெண்ட் காட்சியை அவரின் மாணவரான பாக்யராஜ் வழக்கமான தமிழ் சினிமா க்ளிஷேக்களோடே உருவாக்கி அதையும் தன் ஸ்டைலில் வெற்றிகரமான ஒரு காட்சியாக மாற்றியிருப்பார். அந்த 7 நாட்கள் திரைப்படத்தில் ராஜேஷை வேண்டா வெறுப்பாக திருமணம் செய்துகொள்வார் அம்பிகா. ஆனால் அவருக்கு ஒரு காதல் இருப்பதை அறிந்து அவரை கொண்டு வந்து உன்னிடம் ஒப்படைக்கிறேன் என உறுதியளிப்பார் ராஜேஷ்.

அப்படி அவர் பாக்யராஜைக் கொண்டுவந்து நிறுத்தும்போது அம்பிகா அவரோடு செல்ல யோசிப்பார். பாக்யராஜும் ‘என்னுடைய காதலி உங்க மனைவி ஆகலாம். ஆனால் உங்கள் மனைவி என்னுடைய காதலி ஆகமுடியாது” என சொல்வார், ராஜேஷை சம்மதிக்கவைக்க, ஆவேசமாக அம்பிகாவின் தாலியைக் கழட்ட செல்லும் போது அவரை அறைந்துவிடுவார் அம்பிகா. இதன் மூலம் தாலியில் செண்ட்டிமெண்ட்டை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக சொல்லி, அந்த படத்தையே வெற்றிப் படமாக்கி இருப்பார் பாக்யராஜ்.

vinoth

Recent Posts

வழக்கை முடித்த CBI… மாயமான கல்லூரி மாணவி… போராடி மீண்டும் விசாரணையை தொடங்கிய தந்தை… வெடிக்கும் புதிய திருப்பம்…!!

2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி சம்பவம்..! பாட்டிலில் பட்டாசு செய்த சிறுவன்… நொடியில் பறிபோன கண்பார்வை… கதறும் குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…

6 மணத்தியாலங்கள் ago

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

6 மணத்தியாலங்கள் ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

6 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… மாடல் கடையில் புகுந்து மது பாட்டில்களை… அடித்து நொறுக்கிய பெண்களின் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

6 மணத்தியாலங்கள் ago