Connect with us

கோலாகலமாக நடந்த நடிகர் விஜயகுமார் பேத்தியின் திருமணம்… ஒன்றுதிரண்ட பிரபலங்கள்… வைரலாகும் புகைப்படங்கள்…

CINEMA

கோலாகலமாக நடந்த நடிகர் விஜயகுமார் பேத்தியின் திருமணம்… ஒன்றுதிரண்ட பிரபலங்கள்… வைரலாகும் புகைப்படங்கள்…

 

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சினிமா குடும்பம் என்றால் அதில் நடிகர் விஜயகுமாரின் குடும்பமும் ஒன்று.நடிகர் விஜயகுமார் தொடங்கி அவரது மனைவி, மகன், மகள்கள் என அனைவரும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர்கள். பல்வேறு வெற்றி படங்களை இந்த குடும்பத்தினர் திரையுலகத்திற்கு கொடுத்துள்ளனர்.

   

 

அருண் விஜய் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தாலும், அவரது சகோதரிகள் திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டனர். நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகர் அருண் விஜயின் சகோதரியுமான, அனிதா விஜயகுமாரின் மகள்தான் தியா.

தியா லண்டனில் பயின்று டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.  இந்நிலையில் நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளான அனிதாவின் மகள் தியாவுக்கு கடந்த ஆண்டு டிலன் மிஸ்ட்ரி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இதைத்தொடர்ந்து தற்பொழுது இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இத்திருமண விழாவில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top