தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சினிமா குடும்பம் என்றால் அதில் நடிகர் விஜயகுமாரின் குடும்பமும் ஒன்று.நடிகர் விஜயகுமார் தொடங்கி அவரது மனைவி, மகன், மகள்கள் என அனைவரும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர்கள். பல்வேறு வெற்றி படங்களை இந்த குடும்பத்தினர் திரையுலகத்திற்கு கொடுத்துள்ளனர்.
அருண் விஜய் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தாலும், அவரது சகோதரிகள் திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டனர். நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகர் அருண் விஜயின் சகோதரியுமான, அனிதா விஜயகுமாரின் மகள்தான் தியா.
தியா தற்பொழுது லண்டனில் பயின்று டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இந்நிலையில் நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளான அனிதாவின் மகள் தியாவுக்கு கடந்த ஆண்டு டிலன் மிஸ்ட்ரி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இதைத்தொடர்ந்து இந்த மாதத்தில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக நடிகர் விஜயகுமார் தனது மகள்களுடன் திரைபிரபலன்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் தனது குடும்பத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்த போது எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.