தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜயகுமார். இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல தொலைக்காட்சி தொடர்களில் தற்பொழுதும் நடித்து கொண்டுள்ளார்.


விஜயக்குமாரை தொடர்ந்து அவரது மகன் அருண் விஜய் தமிழ் சினிமாவில் இப்பொழுது ஆக்சன் ஹீரோவாக வெற்றி வலம் வந்து கொண்டுள்ளார்.


நடிகர் விஜய்குமாரின் மனைவி மஞ்சுளா, மகன் அருண் விஜய், மகள்கள் வனிதா விஜயகுமார், பிரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார், கவிதா விஜயகுமார் என பெரும்பாலானோர் திரையுலகில் தடம் பதித்திருக்கின்றனர்.

விஜயகுமாரின் பேரனும் அருண் விஜய்யின் மகனுமான ஆர்ணவ்வும் ஓ மை டாக் படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தார்.

இந்நிலையில், மூத்த மகளான அனிதாவின் மகள் தியாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வெளிநாட்டில் மருத்துவம் படித்து வரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவிற்கு, திலன் என்பவருடன் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றிருந்தது.

இதைத்தொடர்ந்து அவரது திருமண விழா கோலாகலமாக, பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இதில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


தற்பொழுது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைப்பார்த்த ரசிகர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

