தந்தையின் உடல்நிலை குறித்து… மகன் விஜய் பிரபாகரன் வெளியிட்ட உருக்கமான வீடியோ… இணையத்தில் வைரல்…

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவருமாக, தேமுதிக என்ற அரசியல் கட்சியின் தலைவருமாக கம்பீரமாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி உடல்நலக்குறைவால் போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Premalatha

   

தொடர்ந்து நவம்பர் 23 ஆம் தேதி மியாட் மருத்துவமனை நிர்வாகம் விஜயகாந்த் உடல்நிலை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் 18 நவம்பர் 2023 அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல் நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான நடவடிக்கைகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது.

இப்படியான நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த விஜயகாந்த் ‘உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீராக இல்லை’ என நவம்பர் 29 அன்று காலை மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதனால் தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் இதுதொடர்பாக யாரும் பயப்பட வேண்டாம் என நடிகர் விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா விஜயகாந்தின் புகைப்படங்களை வெளியிட்டு, வீடியோ வெளியிட்டும் ரசிகர்களுக்கு தைரியம் ஊட்டினார்.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் மகனான விஜய் பிரபாகரன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் கேப்டன் நடித்த படத்தின் உணர்ச்சிபூர்வமான  காட்சி ஒன்றை பதிவிட்டு ‘Captain is doing great please don’t beleive in rumours he will return home in few days CAPTAIN’ என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதாவது அவர் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் , கேப்டன் நலமாக இருப்பதாகவும் இந்த பதிவில் கூறியுள்ளார்.இதோ அவரின் பதிவு…