காலத்தால் அழியாத ஒரு மாபெரும் கலைஞன், நடிகர், வள்ளல், அரசியல்வாதி விஜயகாந்த். அவரால் சினிமாவில் வாழ்ந்தவர்கள் தான் அதிகம். வேண்டும் என கேட்டு வருபவர்களுக்கு இல்லை என அள்ளி அள்ளிக் கொடுத்தவர், இன்று நம்மிடம் இல்லாமல் துயில் கொள்ள சென்றுவிட்டார். எழுச்சி மிகுந்த நடிகர், அரசியலிலும் புகுந்து ஒரு கை பார்த்து விடலாம் என்று அதே எழுச்சியோடு இருந்தவர், இருந்த இடம் தெரியாமல் போனது ஏன்? நண்பரான ராவுத்தரை அவர் விரட்டியதற்கு என்ன காரணம்? கிராமத்தை விட்டு சினிமாவில் அவர் அடி எடுத்து வைப்பதற்கு மிகவும் பேரூதவியாக இருந்த ஒரே நபர் என்றா அது தயாரிப்பாளர் ராவுத்தர்.

#image_title
இன்று சினிமாவிலும், அரசியலிலும் விஜயகாந்த் வேரூன்றி நிற்பதற்கும் அவர் தான் காரணம். நட்பிற்கு இலக்கணமாய் இருந்தவர்களை பிரித்தது காலம்.. ஏன்? ராவுத்தர்-விஜயகாந்த் பிரிவுக்கு ஒரு வகையில் அவரது மனைவி பிரேமலதா தான் எனவும் கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு தான் இந்த உறவு பிரிந்திருக்கிறது. அதற்கு முன்பு வரை ராவுத்தர் தான் விஜயகாந்தின் கால்ஷூட், சம்பளம் போன்ற அனைத்தையும் பார்த்து வந்தார். ஆனால் என்று அவருக்கு திருமணம் நடந்தோ அதன் பிறகு அத்தனை அதிகாரமும் பிரேமலதாவின் கைக்கு சென்றிருக்கிறது. அதை தொடர்ந்து ராவுத்தருக்கான சொத்துக்களும் சரி பாதியாக பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

#image_title
அதன் பிறகு தான் இந்த இரண்டு நண்பர்களும் இரு வேறு துருவங்களாக மாறிப் போனார்கள். ஒரு கட்டத்தில் ராவுத்தரின் மறைவு, அரசியலில் சரிவு என்று விஜயகாந்த் பல பிரச்சனைகளை சந்தித்தார். அது மட்டுமல்லாமல் நண்பரை பிரிந்த ஒரு குற்ற உணர்ச்சியும் அவருக்கு இருந்திருக்கிறது. இவை அனைத்தும் தான் அவரை மனதளவில் சோர்வடையவும் வைத்திருக்கிறது. அப்படி இருவரும் பிரிந்த காலகட்டத்தில் கூட, ராவுத்தர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தப் போது அடிக்கடி விஜயகாந்த் அவரை சென்று பார்த்து வருவாராம்.

#image_title
அவருக்காக விஜயகாந்த் கண்ணீருடன் எழுதிய கடிதத்தையும் நாம் மறந்துவிட முடியாது. “நண்பா… நீ உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாய் என்ற செய்தி கேட்டு வேதனையுடன் உன்னை நலம் விசாரிக்க வந்தேன். அங்கு நீ சுய நினைவு கூட இல்லாத நிலையில் கட்டிலில் இருந்ததை கண்டதும் என் மனம் பட்ட துயரத்தை நான் மட்டுமே அறிவேன். உன்னைக் கண்டவுடன் நாம் சிறுவயது முதல் கொண்ட உண்மையான நட்பும், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமா உலகில் நாம் போராடி பெற்ற வெற்றி, தோல்விகளும் என் கண் முன்பே வந்து சென்றது.

#image_title
காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ மனக் கஷ்டங்களும், சந்தோஷங்களும் வந்து சென்றிருந்தாலும் என்றுமே உன்னை என் மனம் மறந்ததில்லை. இப்ராஹிம் நீ மீண்டும் நல்ல ஆரோக்கியத்தோடு நலம் பெற்று வரவேண்டும் என்பதே என் பிரார்த்தனை. நண்பா மீண்டு வா எழுந்து வா…!” என்று கண்ணீருடன் எழுதியிருந்தார் விஜயகாந்த். விஜயகாந்தின் புகழ் இந்த உலகத்தில் இருக்கும் வரை அவர் உடன்பிறவா சகோதரர், உயிரினும் மேலான நண்பர் ராவுத்தர் பற்றியும் இவ்வுலகம் மறக்காது. மேலும், விஜயகாந்த் தனது நண்பர் ராவுத்தரை பிரிந்த பிறகு தான் விஜயகாந்த் தனது வாழ்க்கையில் நெறய விஷயங்களில் சறுக்க ஆரம்பித்தார் என்று பிரபல Journalist பாண்டியன் கூறியுள்ளார்.
