இயக்குநர் ஏஆர் முருகதாஸ் திருமணத்தின் போது ஏற்பட்ட பிரச்னை – விஜயகாந்த் கட்சி துவங்க இந்த சம்பவம்தான் காரணம்

By Sumathi

Published on:

Vijayakanth

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக பல வெற்றிப் படங்களை தந்த நடிகர் விஜயகாந்த், கடந்த 2005ம் ஆண்டில் செப்டம்பர் 12ல் மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கினார். கட்சி துவங்கியது முதலே அவரது அரசியல் பயணம், ஏறுமுகத்தில்தான் இருந்தது. அவரது தேமுதிக கட்சி 2006ம் ஆண்டில் சந்தித்த முதல் சட்டசபை தேர்தலிலேயே, 8.11 சதவீதம் என்ற மிகப்பெரிய ஓட்டு சதவீதத்தை பெற்றது. 2011ம் ஆண்டில் சந்தித்த 2வது சட்டசபை தேர்தலில், திமுகவை பின்னுக்கு தள்ளி, சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக விஜயகாந்த் அமர்ந்தார். திமுக – அதிமுக என்ற 2 பெரிய கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்து, முன்னிலைக்கு வந்த விஜயகாந்தை பார்த்து, மற்ற அரசியல் கட்சியினரே அசந்து போய்விட்டனர்.

   

நடிகராக இருந்த விஜயகாந்த் அரசியல் கட்சி துவங்கியது குறித்து, தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, விஜயகாந்த் பிறந்த நாளை ரசிகர்களாகிய நாங்கள் பெரிய அளவில் கொண்டாட அந்த காலத்திலேயே ஆசைப்பட்டோம். அப்போது, என் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட என்னை நீங்கள் அழைத்தால், அந்த நாளில் நான் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நாளாக அது இருக்க வேண்டும் என்றார்.

அதற்கான 3 சக்கர வாகனம், காது கேட்கும் மெஷின், இலவச தையல் மிஷின் போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்தோம். ரஜினிக்கு கொடி இருப்பது போல, நமக்கும் கொடி வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டதால், அவரும் அதற்கு சம்மதித்தார். ஆனால் அதிமுக திமுக கொடிகள் இல்லாத ஊர்களில் கூட எங்கள் கொடி பறந்ததால் கேப்டன் மகிழ்ச்சியடைந்தார்.

இந்நிலையில், ரமணா படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், 2014ம் ஆண்டில் கள்ளக்குறிச்சியில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் திருமணத்தில் கேப்டன் பங்கேற்றார். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், 20 ஜோடிகளுக்கு கேப்டன் ரசிகர்கள் சார்பில் இலவச திருமணம் நடத்தினோம். அப்போது எங்களுக்கும் பாமகவுக்கும் இடையே உள்ளாட்சி பிரதிநிதிகளை மக்களால் தேர்வு செய்வது, நியமனம் செய்வது குறித்து தகராறு ஏற்பட்டது. இதில் குறிஞ்சிப்பாடி, கடலூர், விழுப்புரம் பகுதிகளில் எங்களது மன்ற அமைப்புகளை அவர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

அதே போல் எங்கள் தரப்பிலும் அவர்களது கட்சி அலுவலகங்களை அடித்து சேதப்படுத்தினர். இதில் பெரிய பிரச்னை ஆனது. அதன்பிறகுதான், ரசிகர் மன்ற அமைப்புகள், ரசிகர்கள் தன்மீது கொண்டுள்ள அபரிதமான அன்பை தெரிந்துக்கொண்ட கேப்வன், அரசியல் கட்சி துவங்குவது என்ற ஒரு உறுதியான முடிவுக்கு வந்தார். அதன்பிறகுதான், மதுரையில் 2005ல் தேமுதிக கட்சியை துவக்கினார், என்று பார்த்தசாரதி கூறியிருக்கிறார்.

author avatar
Sumathi