நடிகர் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரங்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில் மூன்று கதாபாத்திரங்களில் நடிகர் விஜய் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிவடைந்து விட்டது. இப்போது வி எஃப் எக்ஸ் பணிகளுக்காக நடிகர் விஜய் மிகவும் பிஸியாக நடித்து வருகின்றார். அமெரிக்காவுக்கு சென்று பணிகளை முடித்துவிட்டு மீண்டும் சென்னை வந்திருக்கும் விஜய் இன்னும் இரண்டு மூன்று தினங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்யும் முடிக்க இருக்கின்றார்.

அடுத்த மாதம் நடிகர் விஜய் உதவி தொகை வழங்குதல், புத்தகங்கள் வழங்குதல் போன்ற பணிகளை செய்ய செல்ல இருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் ஜூன் மாதத்தில் எந்த ஒரு படப்பிடிப்பு சம்பந்தமான வேலையையும் இறங்க வேண்டாம் என்று முடிவோடு இருக்கின்றார் நடிகர் விஜய் .கோட் படத்தின் புதிய அப்டேட் சமீபத்தில் வெளியாகி இருந்தது. யுவன் சங்கர் ராஜா இந்த அறிவிப்பை கொடுத்திருந்தார்.
அதாவது முதன் முதலில் விஜய் இந்த படத்தில் இரண்டு பாடல்களை பாடியிருக்கிறார் என்ற புதிய அப்டேட் கொடுத்திருந்தார். இது ரசிகர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் இதுவரை எந்த திரைப்படத்திலும் நடிகர் விஜய் ஒரு பாடலுக்கு மேல் பாடியது கிடையாது. ஆனால் இந்த திரைப்படத்தில் இரண்டு பாடல்களை பாடி இருக்கின்றார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய அப்டேட் வந்திருக்கின்றது .

ஆரம்பத்தில் இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. ஒன்று அப்பா விஜய், இன்னொரு மகன் அப்பாவுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கின்ற மகனுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கின்றார். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது. மூன்றாவது விஜய்க்கு ஜோடி இல்லை என்றாலும் மற்ற இரண்டு விஜயை விட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பதாக கூறப்படுகின்றது. இதை கேட்ட ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.
