கேப்டன் மறைவுக்கு வந்தபோது விஜயின் முகம் வீங்கியிருந்த ஏன்..? அவருக்கு இப்படி ஒரு பிரச்னையா..? பரபரப்பை கிளப்பிய பயில்வான்..

By Sumathi

Updated on:

நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்து ராஜஸ்தான், இலங்கை, துருக்கி, இஸ்தான்புல் உள்ளிட்ட நாடுகளில் இந்த படத்தின் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

   

இதில் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் இலங்கையில், கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்றில் எடுக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. லியோ படம் போல் இல்லாமல், இந்த படம் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பேசப்பட வேண்டும் என்று இயக்குநர் வெங்கட்பிரபு, பகல் இரவு பார்க்காமல் ஹார்டு ஒர்க் செய்து வருகிறார்.

இந்நிலையில் , நடிகர் விஜய்க்கு இருக்கும் சில உடல் ரீதியான பாதிப்புகள் குறித்து நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் நேர்காணலில் கூறியதாவது, நடிகர் விஜய்க்கு பல ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரச்னை இது. பிரியமுடன் படத்தில் விஜய் நடித்த போது, கைகளில் அவருக்கு பயங்கர வலி ஏற்பட்டது.

குறிப்பாக புஜங்களில் அதிக வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் டாக்டரிடம் பரிசோதனை செய்த போது, அதிக எடைகளை நீங்கள் தூக்க கூடாது. படப்பிடிப்பிலும், வீட்டிலும் அதிக எடை கொண்ட பொருட்களை தூக்கி விடாதீர்கள் என்று எச்சரித்துள்ளனர். அதில் இருந்து விஜய், அதிக எடை கொண்ட ஆயுதங்களை, படத்தின் சண்டை காட்சிகளில் கூட பயன்படுத்துவதில்லை.

அதே போல் நடிகர் விஜய், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது கூட்டத்தில் சிக்கிய அவரை போலீசார் பாதுகாத்து, மீட்டு அழைத்து வந்தனர். அப்போது அவரது கன்னங்கள் இரண்டும் சற்று வீங்கிய நிலையில் இருந்தது. இதற்கு காரணம் அவரது கடைவாயில் சொத்தைப் பற்கள் பிரச்னை இருந்துள்ளதால், கன்னங்களில் வீக்கம் தெரிந்துள்ளது.

கேப்டன் மறைவுக்கு வர வேண்டிய நிலையில், சொத்தை பற்கள் வலியை கூட பொருட்படுத்தாமல் அங்கு வந்திருக்கிறார் விஜய். அதன்காரணமாக மட்டுமே அவர் கன்னங்கள் சற்று வீங்கியதாக தெரிந்தது. மற்றபடி விஜய்க்கு எந்த நோயும் இல்லை.அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

author avatar
Sumathi