Categories: சினிமா

பையன் ஹீரோவா நடிக்குறாரு… அப்பா நீங்க முத்தக்காட்சியில் நடிச்சிருக்கீங்க.. பத்திரிகையாளரின் கேள்வியால் விழிபிதுங்கிய விஜய் சேதுபதி..

Spread the love

தமிழ் சினிமாவில் துணைநடிகராக அறிமுகமான விஜய் சேதுபதி பின், தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்கள் அவரை முன்னிலைக்கு கொண்டு வந்தது. பிறகு ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதி ஒருகட்டத்தில் வில்லன் நடிகராகவும் மாறினார். ரஜினி, கமல், விஜய் போன்றவர்களுடன் வில்லனாக மோதியும் ரசிகர்களை கவர்ந்தார். இப்போது இந்தி படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கிய ஜவான் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி.

நடிகர் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் நடித்த மேரி கிறிஸ்துமஸ் இந்தி படம் குறித்த பிரஸ்மீட் சமீபத்தில் நடந்தது. இதில் செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகர் விஜய் சேதுபதி பதிலளித்தார். அப்போது, அவரது மகன் சூர்யா நடிக்கும் பீனிக்ஸ் படம் மற்றும் கத்ரீனா கைப்புடன் முத்தக்காட்சி குறித்த கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, சூர்யா பத்தி நான் பேசக் கூடாதுன்னு நினைக்கிறேன். அவரே அதற்கு பதில் சொல்வார். அவரே அவரை பார்த்துக்கட்டுமுன்னு விட்டுட்டேன். இந்த படத்தில் முத்தக்காட்சி மட்டும்தான் உங்களுக்கு தெரிஞ்சுதா, வேற எதுவுமே தெரியலையா. அவருடன் நடித்ததே எனக்கு ஆச்சரியமாக தான் இருக்கிறது, என்றார்.

அடுத்து, கடந்த 75 ஆண்டுகளாக இந்திக்கு எதிரான ஒரு சூழலில் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் தரலாமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அப்போது இடைமறித்து பேசிய விஜய் சேதுபதி, இந்த கேள்வி இப்போ இங்கே எதுக்கு என்கிட்ட கேட்கறீங்க, என்கிட்ட கேட்டு என்ன ஆகப் போகுது, எதுக்கு இந்த கேள்வின்னு எனக்கு புரியலை. ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சுக்கணும். இந்தியை யாரும் எதிர்க்கலே, இந்தி வேணாமுன்னு சொல்லலே. இந்தி படிக்கறதை யாரும் தடுக்கலே. இந்தியை திணிக்க வேண்டாமுன்னுதான் சொல்றோம். இது தேவையில்லாத கேள்வி என்றுதான் நினைக்கிறேன், என சற்று எரிச்சலாக பதிலளித்தார்.

admin

Recent Posts

BREAKING: ஒரே நேரத்தில் 15 தவெக MLA-க்கள் ராஜினாமா…. தவெக ஆட்சியை கவிழ்க்க சதி… நள்ளிரவில் உளவுத்துறை கொடுத்த அந்த ரகசிய ரிப்போர்ட்…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், தற்போதைய ஆட்சிக்கு எதிராக திரைக்குப் பின்னால் நடந்த ஒரு பெரும்…

2 minutes ago

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பொலிரோ கார் கும்பல்… மதுரையில் நள்ளிரவு பயங்கரம்… திமுக பிரமுகர் கொலையில் திடுக்கிடும் பின்னணி…!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள இலுப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய கலாநிதி, நள்ளிரவில் மர்ம கும்பலா மிகக்…

6 minutes ago

“5 முன்னாள் அமைச்சர்கள், 10 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்”…. ஒரே நாளில் 15,000 பேர்…. விஜய்யின் கூடாரத்திற்கு மாறும் தமிழக அரசியல்…. அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…!

தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…

14 minutes ago

“சாப்பாட்டில் விஷம் வச்சும் சாகலனு… தூங்கும்போது காதில் விஷம் ஊற்றிய மனைவி”… அதிகாலையில் அலறி அடித்துக்கொண்டு ஓடிய கணவன்…. அடுத்து வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள புழுதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). கூலித் தொழிலாளியான இவருக்கு உமாராணி என்ற…

21 minutes ago

நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்… 8 வயது சிறுமி வசந்தாவிற்கு பாஸ்டர் வீட்டில் நடந்த கொடுமை… அடுத்த நொடியே பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி மாவட்டம், தாரகொண்டா கிராமத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள…

27 minutes ago