“சொன்னது ஒன்னு… செய்யுறது ஒன்னு”… வெற்றிமாறனால் புலம்பித் தவிக்கும் முன்னணி நடிகர்… ஓ.. இதுதான் விஷயமா…?

By Begam on பிப்ரவரி 29, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன்.  வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் விருதுகளை வாரி குவித்துள்ளது. சமீபத்தில் இவர் நடிகர் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது.

   

விடுதலை திரைப்படத்தின் மூலம் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக தமிழ் திரையுலகில் களமிறங்கினார் காமெடி நடிகரான சூரி. மேலும் இத்திரைப்படத்திற்கு பலம் சேர்க்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி அவர்களும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று அசத்தியிருந்தார்.

   

 

இவர்கள் மட்டுமின்றி இயக்குனர் கௌதம் வாசுதேவன், நடிகர் சேத்தன் உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் விடுதலை திரைப்படம் மாபெரும் வரவேற்பு பெற்ற நிலையில், அதன் இரண்டாம் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பொதுவாகவே இயக்குனர் வெற்றிமாறனின் 2 அல்லது 3 வருடத்தை ஒதுக்க வேண்டும்.  இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி ‘நான் விடுதலை இரண்டாம் பாகத்திற்கு வெறும் 8 நாட்களுக்கு தான் கால்ஷூட் கொடுத்தேன். ஆனால் 100 நாட்களை தாண்டி இன்னமும் என் காட்சிகளின் படப்பிடிப்பு சென்று கொண்டு இருக்கிறது. அதற்கு காரணம் படத்தில் நிறைய காட்சி மாற்றம், கதாபாத்திரத்திற்கு ஏற்பட்டு இருக்கும் முக்கியத்துவமே’ என்று கூறினாராம்.