தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர் விஜய் சேதுபதி. பின்னணியில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சேதுபதி, 96, கருப்பன், விக்ரம் வேதா போன்ற தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மிகக் குறுகிய காலத்தில் அதிகப்படியான படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவர் விஜய் சேதுபதி. மற்ற நடிகர்கள் போல் ஹீரோ சப்ஜெக்ட் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறாமல் வில்லன் தோற்றத்திலும் வயதான தோற்றத்திலும் கேமியோ தோற்றத்திலும் என பல படங்களில் நடித்து தனித்துவமான புகழை பெற்றவர் விஜய் சேதுபதி.

நான் மகா நல்ல படத்திற்கு சூரிக்கு நல்ல கேரக்டர் கிடைத்தது. ஆனால் விஜய் சேதுபதிக்கு ஹீரோவின் தோழனாக நடித்திருப்பார். அதில் விஜய் சேதுபதி பெரிய அளவில் தெரிய மாட்டார். சூரி மட்டும் தான் பெரிதாக தெரிவார். ஆனால் அந்த நேரத்தில் தான் விஜய் சேதுபதியை விட சூரியக்கு 10 மடங்கு சம்பளம் அதிகமாக இருந்தது .

ஏனென்றால் அதற்கு முன்பாக வெண்ணிலா கபடி குழு படத்தில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் சூரி. அதனால் அவருக்கு அதிக சம்பளம். ஆனாலும் நாங்கள் பார்க்கும் பொழுதும் , பேசும் பொழுதும் உன்னை விட நான் அதிக சம்பளம் வாங்குகிறேன் என்று சூரி ஒரு நாள் கூட சொன்னது கிடையாது என்று சூரியை பற்றி பெருமையாக விஜய் சேதுபதி பேட்டி ஒன்றை பேசி உள்ளார்.
