தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோ தான் என்று இல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிப்பதால் அவர் கை நிறைய படங்கள் இருக்கிறது. இவர் தனது ரசிகர்களால் அன்போடு ‘மக்கள் செல்வன்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டானது.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ,ஹிந்தி போன்ற பல மொழி திரைப்படங்களிலும் கால் பதித்து நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக களமிறங்கிய விடுதலை திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.
இவரைப்போலவே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் அட்டகத்தி தினேஷ் . இவர் தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு குக்கூ படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார் அதற்காக ஏகப்பட்ட பாராட்டுகள் கிடைத்தது என தெரிவித்துள்ளார். தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் நடிகர் தினேஷ்.
இந்நிலையில் நடிகர் அட்டகத்தி தினேஷ் 14 வருடங்களுக்கு முன்பு தனது பிறந்தநாள் அன்று நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் திடீரென வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் பார்ப்பதற்கு இருவரும் நெருங்கிய நண்பர்கள் போலவும், ஆள் அடையாளம் தெரியாமலும் காணப்படுகின்றனர். இதோ அந்த புகைப்படம்…
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…