யாருக்குமே சிபாரிசு பண்ணாத விஜய் டெல்லி கணேஷுக்கு மட்டும் அதை செய்ததார்.. ஏன் தெரியுமா?..சுவாரஸ்ய சம்பவம்!

By vinoth on கார்த்திகை 12, 2024

Spread the love

நடிகர் டெல்லி கணேஷ், தமிழ் சினிமாவில் தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர். திருநெல்வேலியில் பிறந்த அவர் ஏர்போர்ஸ் வேலைக்காக டெல்லி சென்ற போது அங்குள்ள தமிழ் நாடகக் குழுக்களோடு பழக்கம் ஏற்பட்டு மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படிதான் அவருக்கு சினிமாவுக்கான வழி பிறந்துள்ளது. அவரின் நடிப்பைப் பார்த்து கவரப்பட்ட பாலச்சந்தர், 1976 ஆம் ஆண்டு ‘பட்டின பிரவேசம்’ என்ற திரைப்படத்தில் அவரைஅறிமுகப்படுத்தினார்.

1981 ஆம் ஆண்டு ‘எங்கம்மா மகாராணி’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார் டெல்லி கணேஷ். பின்னர் துணை கதாபாத்திரங்கள், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். ‘அபூர்வ சகோதரர்கள்’ போன்ற சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் டெல்லி கணேஷ். அவருக்கு குணச்சித்திர நடிகராக மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது பாலச்சந்தர் இயக்கிய சிந்து பைரவி திரைப்படம்தான்.

   

அதன் பின்னர் நகைச்சுவை, குணச்சித்திரம் என தனது நடிப்பால் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ளார் டெல்லி கணேஷ். குறிப்பாக கமல்ஹாசனோடு இணைந்து அவர் நடித்த படங்கள் எல்லாம் அவருக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்தன.

   

#image_title

 

சமீபத்தில் அவர் உடல்நலக் குறைவால் மறைந்தது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் சம்மந்தமான அஞ்சலிக் குறிப்புகள், காணொளிகள் மற்றும் அவரின் பழைய நேர்காணல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

அதில் ஒரு நேர்காணலில் தன்னுடைய் மிகச்சிறந்த நகைச்சுவைக் காட்சிகளில் ஒன்றான தமிழன் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தது பற்றி பேசியுள்ளார். அதில் “விஜய்யுடன் நான் நடித்த அந்த பாத்திரத்துக்கு முதலில் வேறு யாரையோ வைத்து எடுத்துள்ளார்கள். நகைச்சுவை வொர்க் அவுட் ஆகவில்லை. அதனால் விஜய்யே என்னைப் பரிந்துரைத்துள்ளார். அப்படிதான் நான் அந்த படத்துக்குள் வந்தேன்” எனக் கூறியுள்ளார்.

வழக்கமாக விஜய் தன்னுடைய படங்களுக்காக யாரையும் பரிந்துரைக்க மாட்டார் என சொல்வார்கள். ஆனால் டெல்லி கணேஷின் நடிப்புக்கு மரியாதைக் கொடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.