#image_title
தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்பொழுது அவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பல முன்னணி பிரபலங்களும் நடித்து வருகின்றனர். விரைவில் இந்த திரைப்பட பணிகள் முடிய உள்ளது.
இதைத்தொடர்ந்து ‘தளபதி 69’ எனும் ஒரே படத்தில் நடித்து முடித்து விட்டு, சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். ஒருபுறம் இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், இனிமேல் தளபதியை திரையில் பார்க்க மாட்டோமே என கவலைப்படவும் செய்கின்றனர். எனவே இத்திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
முதலில் தளபதி விஜய் இயக்குனர் அட்லீயுடன் தனது கடைசி திரைப்படத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இரண்டாவதாக பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவருடைய இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் அவர்கள் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. மூன்றாவதாக பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறி வந்தனர்.
இதைத்தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் அவர்கள் தளபதி 69 திரைப்படத்தை இயக்க உள்ளார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது வெளியாகி உள்ள ஒரு புதிய தகவலின் படி , நடிகர் விஜயின் தளபதி 69 திரைப்படத்தை நடிகரும், இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி தான் இயக்க உள்ளாராம். விரைவில் இதுகுறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…