நடிகர் விஜய் தனது அடுத்த படத்திற்கு என்ன சம்பளம் வாங்க போகின்றார் என்கின்ற தகவலை அவரது நண்பரான ஸ்ரீநாத் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது திரைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படும் இவர் திரைப்படங்கள் எப்போதும் பல கோடிகளை வசூல் செய்யும். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார்.
இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. இவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கின்றார். அதை தொடர்ந்து பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், மைக் மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்கள். யுவன் சங்கர் ராஜா இசை இசையமைத்திருக்கின்றார். வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளின் வெளியாக உள்ளது.
ஏற்கனவே பஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில் நடிகர் விஜய்யின் 50-து பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் விஜய் ஜூன் 22 ஆம் தேதி தன்னுடைய 50-வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார்.
இந்த பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்றும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் சாப்பிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்று அன்பாக வலியுறுத்தி இருந்தார். அதை தொடர்ந்து பெரிய அளவில் எந்த ஒரு பிறந்தநாள் கொண்டாட்டமும் நடைபெறவில்லை. இந்நிலையில் அவரது நண்பரான ஸ்ரீநாத் அவரின் பிறந்தநாள் விழாவில் சில விஷயங்களை பேசி இருந்தார்.
அதில் நடிகர் விஜய் ஒரு அன்பான மனிதர். சிறந்த மகன், சிறந்த கணவன், சிறந்த அப்பா என்று பேசியிருந்த அவர் சிறந்த நண்பனும் கூட அவருக்கு நண்பராக இருப்பது எனக்கு மிகப்பெருமையாக இருக்கின்றது. மேலும் நடிகர் விஜய் தற்போது மிகப்பெரிய பொறுப்புகளை சுமக்க இருக்கின்றார். அதனால் எங்களுக்கும் சில பொறுப்புகள் இருக்கின்றது என்று பேசி இருந்தார். மேலும் அவர் அடுத்த திரைப்படத்தில் 250 கோடி சம்பளம் வாங்க உள்ளதை உறுதி செய்து இருக்கின்றார். இந்த விஷயம் தற்போது திரையுலகில் வைரலாகி வருகின்றது.