Connect with us

Leo Success மீட்டிர்க்கு பிறகு தாய்லாந்துக்கு புறப்பட்டு சென்று தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ..

CINEMA

Leo Success மீட்டிர்க்கு பிறகு தாய்லாந்துக்கு புறப்பட்டு சென்று தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ..

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலில் சக்க போடும் போட்டு வருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் முதல் நாளே உலகம் முழுவதும் 148.5 கோடி வசூலித்து இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத சாதனையை நிகழ்த்தியது. இதைத்தொடர்ந்து தற்பொழுது வரை வசூலில் சக்க போடும் போட்டு வருகிறது.

   

இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இத்திரைப்படத்தில் இதுவரை டபுள் ஆக்ஷனில் யாரும் செய்திடாத பல புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்.

சமீபத்தில் தளபதி 68 திரைப்படத்தின் பூஜை சென்னையில் பிரசாந்த் ஸ்டூடியோவில் நடைபெற்று முடிந்தது. இந்த பூஜை வீடியோவை இயக்குனர் வெங்கடேஷ் பிரபு தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் நடிகை சினேகா, நடிகை லைலா, நடிகர் மைக் மோகன், நடிகர் விடிவி கணேஷ், நடிகர் யோகி பாபு என பல திரைபிரபலங்கள் இத்திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தளபதி 68 திரைப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளுக்கு சென்று படக்குழு படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும்,  அதன்படி தற்பொழுது ‘தளபதி 68’ படக்குழு தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளது. இதைத்தொடர்ந்து தற்பொழுது தளபதியும் லியோ சக்ஸஸ் மீட்டை முடித்த கையோடு தாய்லாந்திற்கு கிளம்பியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Continue Reading
To Top