எனக்கு தளபதி தான் IPL டிக்கெட் வாங்கி குடுத்தாரு.. பேட்டியில் ஓப்பனாக கூறிய பிரபல நடிகை..!

By Mahalakshmi on மே 9, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரை வைத்து படம் இயக்கினால் அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனாலே நடிகர் விஜய் வைத்து படம் இயக்குவதற்கும், தயாரிப்பதற்கும் நீ நான் என்று போட்டி போட்டுக்கொண்டு இருப்பார்கள்.

   

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. விரைவில் ஓரிரு வாரங்களில் இப்படம் முழுவதும் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிகின்றார்.

   

 

அதனை தொடர்ந்து பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் தனக்கு ஐபிஎல் டிக்கெட் வாங்கி கொடுத்ததாக நடிகை வரலட்சுமி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் வரலட்சுமி சரத்குமார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹனுமன் திரைப்படம் கூட நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிலதிபரான நிக்கோலை சச்சிதேவ் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகின்றது. நிச்சயதார்த்தத்திற்கு பிறகு பேட்டி ஒன்றில் பேசிய நடிகை வரலட்சுமி நான் பார்த்த முதல் இரண்டு ஐபிஎல் போட்டிகளின் டிக்கெட்களை வாங்கி கொடுத்தது தளபதி விஜய் தான் என்று கூறி இருக்கிறார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.