Connect with us

8 கோடி ரோல்ஸ் ராய்ஸை ஒதுக்கிட்டு.. திடீரென கம்மியான விலையில் எலக்ட்ரானிக் காரை வாங்கியுள்ள தளபதி.. என்ன காரணம் தெரியுமா..?

CINEMA

8 கோடி ரோல்ஸ் ராய்ஸை ஒதுக்கிட்டு.. திடீரென கம்மியான விலையில் எலக்ட்ரானிக் காரை வாங்கியுள்ள தளபதி.. என்ன காரணம் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்பொழுது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் டபுள் ஆக்ஷனில் நடிக்க உள்ளார் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.

இத்திரைப்படத்தில் நடிகை சினேகா, நடிகை லைலா, நடிகர் மைக் மோகன், நடிகர் விடிவி கணேஷ், நடிகர் யோகி பாபு என பல திரைபிரபலங்கள் நடித்து வருகின்றனர். தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. GOAT என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் ஷூட்டிங் தென்னாபிரிக்கா, தாய்லாந்து, சென்னை என  பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

   

 

இந்தப் படத்தை தளபதி விஜய்யின் பிறந்த நாளான வரும் ஜூன் 22ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தளபதிக்கு  விலையுயர்ந்த கார், பைக் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது ரசிகர்கள் தெரியாத விஷயமல்ல.  கார் கலெக்ஷனில் இவரை மிஞ்ச யாருமில்லை.  இவரிடம் ஏற்கெனவே இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 6 கோடி மதிப்பிலான ரோல்ஸ்- ராய்ஸ் கார் ஒன்று உள்ளது.

தற்பொழுது இவர் தனது பழைய ரோல்ஸ்-ராய்ஸ் காரை ஒதுக்கி வைத்துவிட்டு புதிதாக  BMW i7 xDrive 60 என்ற புது ரக காரை வாங்கியுள்ளாராம். இந்த கார்  எலக்ட்ரானிக் வகையில் உருவாக்கப்பட்டதாம். மேலும் இதன்  விலை ரூபாய் 2.30 கோடி என்றும் கூறப்படுகிறது.
தற்சமயம் பலராலும் எலக்ட்ரானிக் ரக கார்கள் தான் விரும்ப படுவதாலும், தளபதிக்கும் இந்த கார் மிகவும் பிடித்து போய் விட்டதாம்.

Continue Reading
To Top