தமிழ் சினிமாவை பொருத்தவரை இன்றும் சூப்பர் ஸ்டாராக நிற்பவர்தான் ரஜினி. இவரைப் பார்த்து சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் விஜய். சிறுவயது முதல் பல வருடங்கள் விஜய் ரஜினி ரசிகராகத்தான் இருந்தார். ஆரம்பத்தில் விஜய் நடித்த ஒரு சில படங்களில் ரஜினியின் திரைப்பட போஸ்டரை காட்டி நடனமாடி தலைவரு என பாடல் பாடுவார். ஆனால் ஒரு கட்டத்தில் ரஜினி ரூட்டை பிடித்த விஜய் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனைத் தொடர்ந்து என் மகன்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று விஜயின் அப்பா பேசி வந்தார். இருந்தாலும் ரஜினியின் இடத்தை விதையால் பிடிக்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் ரஜினியின் இடத்தை எப்போதும் யாராலும் பிடிக்க முடியாது.

ஏனென்றால் ரஜினிக்கு ஜப்பானில் கூட ரசிகர்கள் உள்ளனர். 70 வயதிலும் கூட அவரால் ஜெயிலர் என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுக்க முடிந்தது. ஆனால் விஜயின் வாரிசு திரைப்படம் வெளியானபோது விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என பலர் மேடைகளில் பேச விஜய்யும் அமைதியாக அதனை ரசித்தார். இந்த நிலையில் ரஜினியின் ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் சமீபத்தில் ஒரே இடத்தில் கமல் மற்றும் ரஜினி இருவரும் படபிடிப்பின் போது சந்தித்துக் கொண்டனர்.

அது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது. இப்படியான நிலையில் விஜய் தளபதி 68 திரைப்படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் நிலையில் சென்னை பிரசாந்த் ஸ்டூடியோவில் படபிடிப்பு செட் போடப்பட்டு இருந்தது. அப்போது ரஜினியின் படப்பிடிப்பும் அருகில் இருக்க, இங்கே நாம் எதுக்கு என்று நினைத்த விஜய் படப்பிடிப்பை வேறு இடத்திற்கு மாற்ற கூறியுள்ளார். தற்போது வேறு இடத்தில் விஜயின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

தன்னைவிட மூத்த நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்திப்பதில் விஜய் விரும்பவில்லை என இதில் தெரிகிறது. அதே சமயம் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக் கொண்டிருக்க ஒருவேளை விஜய் மற்றும் ரஜினி தற்போது சந்தித்திருந்தால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். ஆனால் விஜய் இதை செய்யாததால் ஒருவேளை சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு அவரும் ஆசைப்படுகிறாரோ என்ற எண்ணம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
