தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. பிறகு நான் படத்தில் ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து பிச்சைக்காரன் திமிரு புடிச்சன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து முன்னணி நடிகராக மாறினார். இப்போது நடிகர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது, என் கேரியரிலேயே மிகப்பெரிய படம் என்றால் அது வேட்டைக்காரன் தான். அந்த படத்தோட வாய்ப்பு எனக்கு இயக்குனர் மூலமாகவோ தயாரிப்பாளர் மூலமாகவோ கிடைக்கவில்லை.
அது விஜய் மூலமாக தான் கிடைத்தது. விஜய் சார் தான் விஜய் ஆண்டனி நல்லா பண்றார். அவருக்கு வாய்ப்பு கொடுங்கன்னு சொல்லி இருக்கார். அதுவும் அந்த படத்துக்கு நான் அப்போது வாங்கின சம்பளத்தை விட 4 மடங்கு அதிக சம்பளம் கொடுத்தாங்க. அந்த படத்தோட எல்லா பாடலிலும் அவ்வளவு ஈடுபாடா விஜய் இருந்தார். சொல்லப் போனால் ஒரு சின்ன தாமரை பாடலுக்கு சுச்சியை பாட வைக்கலாம்ன்னு சொன்னது விஜய் தான் என்று நடிகர் விஜய் ஆண்டனி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
