விஜய் ஆண்டனி மனைவி ஒரு தொகுப்பாளாரா?… காதல் திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்த விஜய் ஆண்டனி..!!

By Nanthini on ஆடி 14, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் இவரது திரை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இவர் கொடுத்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

   

விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து வருகின்ற ஜூலை 21ஆம் தேதி விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலை திரைப்படம் வெளியாக உள்ளது.

   

 

இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி தன்னுடைய காதல் திருமணம் குறித்து பேசி உள்ளார். சுக்ரன் படம் ரிலீஸ் ஆன போது பாத்திமா எனக்கு போன் செய்து பாராட்டினார். செல்லமணி நேரம் அவரிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வருமாறு அழைத்தேன். அப்போது அவர் சன் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருந்தார்.

என்னுடைய அம்மாவுடன் அவர் மிகவும் எளிமையாக பேசினார். அப்போது அவரை காதலிக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அவரின் வீட்டிற்குச் சென்று உங்கள் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறதா இருந்தா அதுல என் பெயரை சேர்த்திடுங்க என்று சொன்னேன். உடனே அவர் சிரித்தார். அதில் அவருக்கு என்னை பிடித்தது தெரியவந்தது என தனது காதல் திருமணம் குறித்து விஜய் ஆண்டனி கலகலப்பாக பேசினார்.