Categories: சினிமா

அட அப்படியா..! வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா..?

Spread the love

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் மகாராஜா திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரை ஹீரோ என்று ஒரு சிறிய வட்டத்திற்குள் கொண்டு வந்து விட முடியாது. ஹீரோவை தாண்டி வில்லன், சிறப்பு தோற்றம், வயசான கதாபாத்திரம் என அனைத்திலும் நடித்து தன்னுடைய நடிப்பை மெருகேற்றி வைத்திருக்கின்றார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தன்னால் நடிக்க முடியும் என்று சொல்லாமல் சொல்லிக் காட்டியவர் விஜய் சேதுபதி.

புது முயற்சிகளை மேற்கொள்வது என்பதை இவருக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ந்து சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் சமீபத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி ஜவான் திரைப்படத்திற்கு பிறகு இனிமே வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். இவருக்கு ஹீரோவாக சிறந்த கம்பேக் கொடுத்த திரைப்படமாக அமைந்தது தான் மகாராஜா. இதில் மற்றொரு சிறப்பு உண்டு,

இது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமும் ஆகும். குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கியிருந்த நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றார், ஒரு ஹீரோவுக்கு ஐம்பதாவது திரைப்படம் என்பது மிக ஸ்பெஷலான படம் அந்த ஸ்பெஷலான திரைப்படத்தின் எந்த ஒரு ஹீரோயின்ஸமும் காட்டாமல் கதை மட்டுமே முழுக்க முழுக்க நிரம்பி இருக்க விஜய் சேதுபதி மகாராஜாவாகவே கலக்கியிருந்த திரைப்படம் தான் மகாராஜா.

இப்படம் வெளியான நாள் முதலே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சக்க போடு போட்டு வருகின்றது. இப்படத்தை பார்க்கும் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. எங்கு பார்த்தாலும் பாசிட்டிவான விமர்சனங்கள் இருந்து வருவதால் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் முதன் முதலில் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தது விஜய் சேதுபதி இல்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதாவது பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தான் இப்படத்தில் முதலில் நடிப்பதற்கு ஹீரோவாக கமிட் ஆனார். தனஞ்செயனின் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிப்பில் மகாராஜா திரைப்படம் உருவாக இருந்தது .விஜய் ஆண்டனிக்கு கதை கூறி அவர் இப்படத்தில் நான் தான் நடிப்பேன் என்று அடம் பிடித்து இருந்தார்.

ஆனால் நித்திரன் சாமிநாதனுக்கு பேஷன் ஸ்டுடியோவில் இருந்து என்ஒசி கிடைக்கவில்லை. இப்படத்தை விஜய் ஆண்டனியை வைத்து நாங்களே தயாரிக்கின்றோம் என்று கூறி இருக்கிறார். ஆனால் தனஜெயன் விஜய் ஆண்டனியை நான்தான் ஒப்பந்தம் செய்துள்ளேன் என்று கூறிய காரணத்தினால் கடைசி நேரத்தில் இப்படம் விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது. இந்த தகவலை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்.

Mahalakshmi

Recent Posts

சண்டை தான் வரும்…! “தெரு நாய்களுக்கு உணவு அளித்தால் ரூ.5,000 அபராதம்…” மீரா பயந்தர் மாநகராட்சியின் உத்தரவுக்கு எதிர்ப்பு…!

மும்பை அருகே உள்ள மீரா பயந்தர் மாநகராட்சி , குறிப்பிட்ட 20 இடங்களைத் தவிர்த்துப் பிற பொது இடங்களில் தெரு…

3 minutes ago

மனித குலத்திற்கு மிகபெரிய எச்சரிக்கை…! நேபாள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,050 ஆக உயர்வு… 4,000 பேரை காணவில்லை… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,050 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம்…

13 minutes ago

“தவெகவில் இணைந்த கையோடு முக்கிய பொறுப்பு…” சிங்கை ராமச்சந்திரனுக்கு CM விஜய் வழங்கிய பதவி… தவெகவில் கிளம்பிய பரபரப்பு…!!

தமிழக வெற்றிக் கழகத்தில் "தவெகவில் இணைந்த கையோடு முக்கிய பொறுப்பு..." சிங்கை ராமச்சந்திரனுக்கு CM விஜய் வழங்கிய பதவி... தவெகவில்…

23 minutes ago

இனி வெயிட் பண்ண வேண்டாம்…! 4 மணி நேரத்தில் கேஸ் சிலிண்டர் கிடைக்கும்…! இண்டேன் நிறுவனத்தின் அசத்தல் திட்டம் தொடக்கம்…!

பொதுவாக வீடுகளுக்கு 14.20 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிதாக 10…

28 minutes ago

“நாங்க சொல்றத கேளு…” பெண்ணை காட்டுப்பகுதிக்கு கடத்தி கொடூரம்… நிர்வாணமாக்கி படம் பிடித்த கும்பல்…. பகீர் பின்னணி…!!

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சிவா மற்றும் அவர்களது நண்பர் ஆகியோர் சேர்ந்து, 40 வயதுடைய பெண்…

37 minutes ago

ஐயோ… உள்ளே குட்டி மாட்டிக்கிச்சு… 3 வயது சிறுமியை ஆழமான… இடுடுக்கில் இறக்கி நாய்க்குட்டியைக் காப்பாற்றிய… திக் திக் நிமிடங்கள்…!!

சீனாவின் காசு மாநிலம் லின்சியா நகரில் கட்டிடங்களுக்கு இடையே உள்ள குறுகிய மற்றும் ஆழமான இடைவெளியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டியை…

2 மணத்தியாலங்கள் ago