பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகர் விக்னேஷ் காந்த்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி…… வாழ்த்துக்கள் கூறிய திரை பிரபலங்கள்….

By Begam

Updated on:

சென்னை 28, மீசைய முறுக்கு,  நட்பே துணை, மெஹந்தி சர்க்கஸ், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு போன்ற படங்களில் காமெடி நடிகராக நடித்து பிரபலமானவர் ஆர் ஜே விக்னேஷ் காந்த். தொகுப்பாளரான விக்னேஷ் காந்த் சின்னத்திரை தொகுப்பாளராகி, பின்னர் நகைச்சுவை நடிகராக சினிமா துறையில் அறிமுகமானார்.

   

விக்னேஷ் காந்த்துக்கும் இன்ஜினியரிங் பட்டதாரியான ராஜாத்தி என்பவருக்கும் செப்டம்பர் 7 அன்று திருச்சி வயலூர் முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் திரை பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் மட்டும் திருச்சி வந்து திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தற்பொழுது இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரமேஷ் பிரபு, ஆதி, கார்த்தி, தேவா, சுரேஷ், காமாட்சி ஸ்டுடியோ கிரீன் ஞானவேல், தனஞ்செயன், சக்திவேலன், மணி ஹுசைன், கோபிநாத், சாண்டி, தம்பி ராமையா, சமுத்திரக்கனி, ஆத்மிகா, கவின், அமுதவாணன், இயக்குனர் கிஷோர், சினேகா, பிரசன்னா, மனோபாலா, கே எஸ் ரவிக்குமார், பார்த்திபன், சுந்தர் சி, ஆரி பாலசுராமன் ஆர்த்தி கணேஷ் மகாலிங்கம் தங்கதுரை அந்தோணி தாசன் பாலா தீபக் போன்ற திரைப்பிரபலங்கள்  கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.

விக்னேஷ் காந்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அவற்றில் சில  உங்கள் பார்வைக்காக….