#image_title
பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் ‘சக்தி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான போர்ஸ் படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவரது வில்லன் கதாபாத்திரம் அனைவரையும் மிரட்டியிருந்தது.
நடிகர் வித்யூத் ஜம்வால் தமிழில் விஜய். அஜித் சூர்யா என மூன்று முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அஜித் நடித்த பில்லா 2 படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இதைத்தொடர்ந்து இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ‘துப்பாக்கி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் இதுவரை வில்லன்களுக்கு என்று எழுதப்பட்ட இலக்கணத்தை மாற்றி அமைத்தவர் இவர். துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றிக்கு இவரும் ஒரு காரணம் என்றே கூறலாம். அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘அஞ்சான்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்பொழுது இவர் ஹிந்தி திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகர் வித்யுத் ஜம்வால் ஆடையில்லாமல் இமய மலையில் ஒரு வார காலத்திற்கும் மேல் நேரத்தை தனிமையில் செலவிட்டது பற்றி பதிவிட்டு இருக்கிறார். 14 வருடங்களாக தான் இதை செய்து வருவதாகவும் அவர் கூறி இருக்கிறார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…