சின்னத்திரையில் கலக்கி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் முத்துவுக்கு அடித்த ஜாக்பாட்… பயங்கர குஷியில் ரசிகர்கள்…

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.  இந்த சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அது மட்டுமின்றி டிஆர்பியிலும் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் தங்களது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்கள் மத்தியில்  ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளனர்.

   

ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரமாகவே இந்த சீரியலில் வாழ்ந்து வருகின்றனர்.  தற்பொழுது இந்த சீரியலில்  முத்துவையும் மீனாவையும் வெளியே விரட்ட ஒரு பக்கம் ரோகினி முயற்சி செய்து வருகிறார். அதுமட்டுமின்றி சுருதி அடித்த கொசு மருந்தால் முத்துவின் அப்பா ஹாஸ்பிடலிலிருந்து தற்பொழுது தான் குணமாகி வீட்டிற்கு வந்துள்ளார் முத்து தனது அறையை தனது அப்பாவிற்கும், அம்மாவிற்கும் கொடுத்துவிட்டு வெளியே வந்து விட்டார்.

முத்துவின் மச்சான் செய்யும் திருட்டு வேலைகள் அனைத்தும் தற்போது முத்துவிற்கும் தெரிந்து விட்டது. இந்நிலையில் அடுத்தது என்ன நடக்கப்போகிறது என்பது அறிய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். தற்பொழுது இந்த சீரியல் 300 எபிசோடுகளை கடந்து விட்டது. இதனை மொத்த டீமும் இணைந்து கொண்டாடியுள்ளனர்.

அப்பொழுது முத்து கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் வெற்றி வசந்த் தனது instagram பக்கத்தில் லைவ் வீடியோவில் வந்துள்ளார். அதில் ரசிகர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்துள்ளார். அப்பொழுது அவர் ‘விரைவில் என்னை பெரிய திரையிலும் பார்க்கப் போகிறீர்கள். உங்களுடைய ஆதரவு எனக்கு வேண்டும் என்று  கூறியுள்ளார். மேலும் சில வெப் சீரியஸ் களில் நடிப்பதாகவும் கூறியிருக்கிறார் . இந்த செய்தி அவரது ரசிகர்களை  குஷிப்படுத்தியுள்ளது.