Connect with us

சிவாஜியின் அரசியல் பதவி குறித்து துல்லியமாகக் கணித்து சொன்ன நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி… அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

CINEMA

சிவாஜியின் அரசியல் பதவி குறித்து துல்லியமாகக் கணித்து சொன்ன நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி… அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் 1965 இல் டைரக்டர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நகைச்சுவை நடிகர் வெண்ணிற தாய் மூர்த்தி. அத்திரைப்படத்தில் அவர் நடித்ததன் மூலம் அவருக்கு வெண்ணிற ஆடை மூர்த்தி என்ற பெயரும் வழங்கப் பட்டது.

நகைச்சுவை நடிகர் மூர்த்தி உலக மக்கள் அனைவரையும் தனது சிரிப்பால் கட்டிப்போட்டவர். நகைச்சுவை நடிகர் வெண்ணிற மூர்த்தி பல்வேறு தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் வெளிவரும் சீரியல்களிலும் நடித்துள்ளார்.நகைச்சுவை நடிகர் மூர்த்தி இந்திய சினிமா திரை உலகில் 500 – க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இன்றுவரை நடித்துள்ளர்.

வெண்ணிற ஆடை மூர்த்தியின் தனிச்சிறப்பு என்னவென்றால் எப்படியாவது தன்னுடைய காமெடிக் காட்சிகளில் எதாவது இரட்டை அர்த்தம் வருவது போல வசனங்களோ அல்லது உடல் மொழியையோ வெளிப்படுத்தி விடுவார். ஆனாலும் அவற்றில் பல பெரியவர்கள் ரசித்து பார்க்கும்படி இருக்கும்.

   

ஈகோ பார்க்காமல் எல்லா நகைச்சுவை நடிகர்களோடும் இணைந்து நடித்துள்ள வெண்ணிற ஆடை மூர்த்தி சமீபத்தில் முழு மகிழ்ச்சியோடு சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். வெண்ணிற ஆடை மூர்த்தி நடிகராக இருந்த போதும் ஜோதிடத்தில் அபார அறிவுள்ளராக அறியப்பட்டுள்ளார். அதனால் அவரின் சக நடிகர்கள் அவரிடம் தங்கள் ஜாதகத்தைக் கொடுத்து கணிக்க சொல்வார்களாம். அப்படிதான் ஒருமுறை சிவாஜி கணேசன் அவரிடம் தன் ஜாதகத்தைக் கொடுத்துள்ளார்.

 

அவரின் ஜாதகத்தைக் கணித்த மூர்த்தி, “உங்களுக்கு அரசு சம்பந்தமான பதவி கிடைக்கும்” என்று கூறியுள்ளார். ஆனால் அதை சிவாஜி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். ஆனால் அவர் கூறியது போலவே “சிவாஜிக்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவி” கொடுக்கப்பட்டுள்ளது.

இது நடந்த சில மாதங்களுக்குப் பிறகு சிவாஜி, மூர்த்தியை சந்தித்த போது, “நீ சொன்னது மாதிரியே நடந்திருச்சு.. எல்லாரும் வீட்டுல வந்து பார்த்தாங்க நீ ஏன் வரல” எனக் கேட்டுள்ளார். அதற்கு மூர்த்தி தனக்கே உண்டான ஸ்டைலில் “உங்களுக்கு பதவி வரும்னு ஜோசியம் கணிச்சு சொன்னது நான். நியாயமா பார்த்தா நீங்கதான் என் வீட்டுல வந்து என்னைப் பார்த்திருக்கணும்” என சொன்னாராம். அவரின் இந்த கமெண்ட்டை சிவாஜி வெகுவாக ரசித்தாராம்.

Continue Reading
To Top