“என்னை செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு…” நடுரோட்டில் பேண்ட்டை கழற்றிய சூப்பர் ஸ்டார்… அதை எதிர்பார்க்கல…. பிரபல நடிகர் பகிர்ந்த ரகசியம்…!!

By Devi Ramu on ஆடி 12, 2026

Spread the love

இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் உருவான ‘சிவாஜி’ திரைப்படப் படப்பிடிப்பின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எளிமையான குணத்தைக் கண்டு தான் வியந்த சுவாரசியமான அனுபவத்தை நடிகர் போஸ் வெங்கட் அண்மைய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்காகத் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பங்கேற்றபோது, அங்கிருந்த ஆடை வடிவமைப்பாளர் பொது இடத்திலேயே உடைகளை மாற்றிக்கொள்ளுமாறு தன்னிடம் கூறியுள்ளார். மறைவான இடம் எதுவும் இல்லாததால் தயங்கிய போஸ் வெங்கட், மாற்று இடவசதி குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டுள்ளார்.

அப்போது படப்பிடிப்பு அவசரமாக நடப்பதால் உடனடியாக அங்கேயே ஆடைகளை மாற்றுமாறு அவரிடம் ஊழியர்கள் வற்புறுத்தியுள்ளனர். அந்தச் சமயத்தில் தற்செயலாகப் பின்னால் திரும்பிப் பார்த்த போஸ் வெங்கட், தனக்குக் கிடைத்த அதிர்ச்சியைப் பகிர்ந்துள்ளார். அங்கு ஒட்டுமொத்தப் பொதுமக்களும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, எவ்வித பந்தாவும் இன்றி ரஜினிகாந்த் தனது உடைகளை மாற்றிக் கொண்டிருந்ததைக் கண்டு நெகிழ்ந்துள்ளார். இத்தனை பெரிய உச்ச நட்சத்திரமே எளிமையாக இருக்கும்போது தான் மறைவிடம் கேட்டது தனக்குச் செருப்பால் அடித்தது போல் இருந்ததாக அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.