Connect with us

எனக்கு கை, கால் விளங்கல.. யாராவது பணம் கொடுத்து உதவ வேண்டி வடிவேலுவுடன் நடித்த காமெடி நடிகர் வெளியிட்ட வீடியோ வைரல்..!!

CINEMA

எனக்கு கை, கால் விளங்கல.. யாராவது பணம் கொடுத்து உதவ வேண்டி வடிவேலுவுடன் நடித்த காமெடி நடிகர் வெளியிட்ட வீடியோ வைரல்..!!

நகைச்சுவை நடிகரான வெங்கல் ராவ் ஆந்திராவின் விஜயவாடாவுக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் பிறந்தவர். முதலில் சினிமாவுக்குள் சண்டை கலைஞராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு கடந்த 1995-ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் பிரபு நடிப்பில் உருவான கட்டுமரக்காரன் படத்தின் மூலம் நடிகராக என்ட்ரி கொடுத்தார்.

Tollywood Movie Actor Vengal Rao Biography | பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் மருத்துவமனையில் அனுமதி

இவருக்கு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிரபல காமெடி நடிகரான வடிவேலுவுடன் இணைந்து வெங்கல் ராவ் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் வடிவேல் நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் வெங்கல் ராவ் நடித்துள்ளார்.

   

சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு..." - வெங்கல் ராவ் ஷேரிங்ஸ் | Comedy actor vengal rao interview - Vikatan

 

இந்நிலையில் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்ட வெங்கல் ராவ் கடந்த 2022- ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் வெங்கல் ராவ் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியதாவது, நான் உங்கள் வெங்கல்ராவ் பேசுறேன். கை கால்கள் நடக்க முடியவில்லை.

காமெடி நடிகர் வெங்கல் ராவ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.. வடிவேலு நேரில் சந்திப்பாரா? | Comedy Actor Vengal Rao admitted in Hospital - Tamil Filmibeat

வாய் பேச முடியவில்லை. சினிமா தொழிலாளர்களும், சினிமா நடிகர்களும் எனக்கு உதவி பண்ணுங்க. மாத்திரை வாங்க பணம் இல்லை. மருத்துவமனை போக முடியல. ரொம்ப கஷ்டப்படறேன். இதுக்கு மேல என்னால பேச முடியாது. சினிமாவில் இருப்பவர்கள் எனக்கு உதவி பண்ணுங்க. நன்றி வணக்கம் என கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Kayal Devaraj (@actorkayaldevaraj)

author avatar
Priya Ram
Continue Reading
To Top