#image_title
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலை பார்க்க ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடும் பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எதிர்நீச்சல் கதை உருவாகிறது. இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது. எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பிய மாரிமுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவரது இறப்பிற்கு பிறகு எழுத்தாளர் வேலராமமூர்த்தி ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்தார். என்ன இருந்தாலும் அவரது நடிப்பு மாரிமுத்துவின் நடிப்பை போல இல்லை என சிலர் கூறி வந்தனர் எப்படி இருந்தாலும் இவருக்கென ஒரு தனித்துவமான நடிப்பு உள்ளது. ஒரு ஆண்டுக்கு வேல ராமமூர்த்தி கதாபாத்திரம் இடம்பெற்றிருக்கும் 8 முதல் 10 படங்கள் ரிலீஸ் ஆகிவிடும்.
மதயானை கூட்டம் மூலம் தமிழ் சினிமாவில் வேலராமமூர்த்தி தனது பயணத்தை தொடங்கினார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல அற்புதமாக நடிப்பார். இப்போது எதிர்நீச்சல் சீரியலில் கமிட்டாகி நடிக்க ஆரம்பித்த பிறகு அவருக்கு வெள்ளித்திரையில் நடிப்பதற்கு நேரம் இல்லையாம். ஒரு நாள் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கு 40,000 வரை சம்பளம் வாங்குகிறார் வேலராமமூர்த்தி.
இதுவரை நான்கு படங்களில் வாய்ப்பு வந்தும் அவரால் நடிக்க முடியவில்லை. ஐந்து படங்களில் சம்பாதிப்பதை குறைந்த நேரத்தில் 2 எபிசோடுகளில் வேலராமமூர்த்தி சம்பாதித்து விடுகிறார். வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையில் குறைந்த நேரத்திலேயே அவர் அதிகமாக சம்பாதிக்கிறார். இதனால் இனிவரும் காலங்களில் அவர் வெள்ளித்திரையில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…