Categories: சினிமா

8 மனைவிகளையும் ஒரே வீட்டில் வச்சி குடும்பம் நடத்திய MR ராதா.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் வாசு விக்ரம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் தனக்கு முன்னோடி இல்லாத நடிகர்களில் ஒருவர் எம் ஆர் ராதா. தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். மேடை நாடகத்தில் முடி சூடா மன்னனாக விளங்கியவர். 1930 மற்றும் 40 களிலேயே சில படங்களில் நடித்தாலும், நாடகம் அளவுக்கு அவருக்கு சினிமா பிடிக்கவில்லை. அதனால் நாடகங்களிலேயே கவனம் செலுத்தினார்.

அதன் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டு ரத்தக் கண்ணீர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின்னர் அவருக்கு குணச்சித்திர நடிகராக மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது சிவாஜியோடு அவர் இணைந்து நடித்த ‘பாகப்பிரிவினை’ திரைப்படம்தான். அந்த படத்தில் சிங்கபூரான் என்ற வேடத்தில் கலக்கி இருப்பார் ராதா. ராதாவை நம் படத்தில் போட்டால் அவரே நகைச்சுவை மற்றும் வில்லத்தனம் என இரண்டையும் பார்த்துக்கொள்வார் என அவரை எல்லா படத்திலும் புக் பண்ண ஆரம்பித்தனர்.

 

எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் இருபெரும் நடிகர்களாக உருவாகி வந்த காலத்தில் கூட அவர்களுக்காக பணிந்து போகாதவர் எம் ஆர் ராதா. இருவரும அவரை மரியாதையோடு “அண்ணே” என்றுதான் அழைப்பார்கள். எம் ஆர் ராதாவுக்கு தமிழ் சினிமாவில் எப்படி முன்னோடி என்று ஒருவர் கிடையாது, ஆனாலும் அவரின் நடிப்புப் பாணியை அவரின் மகன்கள் வாசு, ராதாரவி உள்ளிட்டவர்களும் மணிவண்ணன், விவேக் உள்ளிட்டவர்களும் பிரதியெடுத்தனர்.

இந்த நிலையில் எம்.ஆர் ராதாவின் மூத்த பேரன் வாசு விக்ரம் பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சித்தி சீரியலில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய தாத்தா எம். ஆர்.ராதா பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், என்னிடம் என் தாத்தா அந்த அளவிற்கு எதுவும் பேச மாட்டார். நான் பள்ளியில் படிக்கும் போதே பேனாவை கையில் எடுக்காதே ஸ்பேனரை கையில் எடு வாழ்க்கை நல்லா இருக்கும் என்று சொன்னார். அதற்கு பின்னால் உள்ள காரணம் டெக்னாலஜி தான். அவர் அன்னைக்கு சொன்னது இன்னைக்கு தான் எனக்கு புரியுது. என்னுடைய தாத்தாவுக்கு அந்த அளவிற்கு குடிப்பழக்கம் கிடையாது. சில சமயங்களில் மட்டுமே 2 பெக் போடுவார்.
அது மட்டும் அல்லாமல் எனக்கு தெரிந்த வரைக்கும் என் தாத்தாவுக்கு சுமார் ஏழு அல்லது எட்டு மனைவிகள் இருந்தனர். இதுல பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த எட்டு மனைவிகளையும் ஒரே வீட்ல வச்சு வாழ்ந்து குடும்பம் நடத்தினார். தேனாம்பேட்டையில ஒரு பெரிய இடத்துல லைனா எங்க வீடு தான் இருந்துச்சு. அங்க எல்லாரையும் ஒட்டுக்கா வச்சு கடைசி வரைக்கும் குடும்பம் நடத்துனாரு. அவர் போனதுக்கு அப்புறம் கூட எங்க குடும்பத்துல நிறைய பிரச்சனை இருந்தாலும் இன்னைக்கு வரைக்கும் நாங்க எல்லாரும் மனசு அளவுல ஒன்றாகத்தான் இருக்ககோம்.
சினிமாவை பொறுத்த வரைக்கும் எதுக்காகவும் யாருக்காகவும் அவர் காத்திருக்க மாட்டார். டைம் ஆகிவிட்டால் சூட்டிங் தொடங்கியே ஆகணும். அவருக்கு பெயர் வாங்கி கொடுக்கவில்லை என்றாலும் நான் அவருடைய பெயரை கெடுக்காமல் தான் நடித்திருக்கிறேன். ராதாரவி மற்றும் ராதிகா ஆகியோரை என் வாழ்நாளில் நான் மறக்கவே மாட்டேன். ஏனென்றால் எனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது அவர்களால்தான் என்று தனது தாத்தா எம் ஆர் ராதா பற்றியும் தனது குடும்பம் பற்றியும் வாசு விக்ரம் பகிர்ந்து உள்ளார்.
Nanthini

Recent Posts

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

4 minutes ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

17 minutes ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

24 minutes ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

26 minutes ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

31 minutes ago

“நான் கனவு காண்கிறேனா?”… வீட்டிற்குள் கேட்ட கீச் கீச் சத்தம்!… வீட்டைத் திறந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி… 90 முட்டைகள் தானாகவே பொரிந்த அதிசயம்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ!

வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…

33 minutes ago