நடிகர் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் தனது கதாபாத்திரம் மற்றும் படத்தின் சில விஷயங்களை நடிகர் வைபவ் பகிர்ந்து இருக்கின்றார். இது ரசிகர்களை குஷிப்படுத்திய இருந்தாலும் வெங்கட் பிரபுவை சற்று கோபப்படுத்தி இருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள் காரணம் தனது திரைப்படத்தின் கதை என்ன என்பதை கொஞ்சம் கூட வெளியில் தெரியக்கூடாது என்று மிகவும் கவனமாக இருப்பவர் இயக்குனர் வெங்கட் பிரபு.
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் பெறுபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கின்றார். விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்திருக்கின்றார்.
மேலும் பிரசாந்த் பிரபு, தேவா, அஜ்மல், மைக் மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட பல பிரபலங்கள் படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா என்று ஆரம்பிக்கும் இப்பாடல் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்நிலையில் கோட் திரைப்படத்தில் நடித்து வரும் வைபவ் இப்படத்தில் இருந்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார்.
கோட் படம் பக்கா ஆக்சன் ட்ரீட்டாக இருக்கும், வேறு லெவல் திருப்திப்படுத்தும் படத்தில் தளபதி விஜய் உடன் பல காட்சிகளில் அவருக்கு நண்பராக நடித்திருக்கின்றேன். நடிப்பு மிரட்டல் என்று சமீபத்திய பேட்டியில் நடிகர் வைபவ் பேசியிருந்தார், இதை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன இவர் இப்படி பேசிக் கொண்டிருக்கின்றார், இது நிச்சயம் வெங்கட் பிரபு தெரிந்தால் கோபப்படுவார் என்று கூறி வருகிறார்கள்.