அன்பான துணைவி அமைந்தால் பேரின்பமே.. மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய வைபவ்.. வைரலாகும் புகைப்படம்..

By Begam on மார்கழி 5, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் வைபவ் ரெட்டி. இவர் தெலுங்கு சினிமாவில் 2007 ஆண்டு ‘கோதவா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.  இதனை அடுத்து 2008ல் ‘சரோஜா’ படத்தில் வெங்கட் பிரபு அறிமுகப்படுத்தினார். சரோஜா படத்துக்கு பிறகு ‘சென்னை 600098’ படத்தில் நடித்தார்.

  

   

இத்திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. ‘மங்காத்தா’  படத்தில் தல அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இதனை தொடர்ந்து ‘மேயாத மான்’ படத்தில் தனது முழு நடிப்புத் திறனையும் காட்டியுள்ளார்.

   

 

இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ‘ஆலம்பனா’. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களிலும் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் நடிகர் வைபவ்.

இவருக்கு திருமணமாகி, குழந்தைகளும் உள்ளனர். தற்பொழுது இவர் தனது மனைவியுடன் திருமண நாளை சமீபத்தில் கொண்டாடினார். இப்புகைப்படத்தை பகிர்ந்து, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்…