அதிக மதுபோதையில் இருந்த நடிகர் மணிவண்ணன் செய்த அந்த விஷயம்… அவரது இறப்புக்கு அதுதான் காரணமா? – பிரபல நடிகர் போட்டுடைத்த சீக்ரட்!

By Elango on மார்கழி 16, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர கலைஞராக தன்னை வெளிப்படுத்தியவர் நடிகர் வாகை சந்திரசேகர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் வாகை சந்திரசேகர் இயக்குனர் மணிவண்ணன் குறித்து கூறியதாவது, மணிவண்ணன் பல வெற்றிகளை சினிமாவில் குவித்தவர். அவர் அடைந்த எல்லா வெற்றிகளுக்குமே அவர் தகுதியானவராக இருந்தார். மிகவும் திறமைமிக்கவர் மணிவண்ணன். வாழ்க்கையில் வெற்றியாளர்களுக்கு என சில பழக்கங்கள் உள்ளன. அந்த மாதிரி நடிகர் மணிவண்ணனுக்கு மதுப்பழக்கம் இருந்தது. மது குடிப்பது சந்தோஷமாய் இருப்பதற்கு தான்.

வாழ்க்கையில் நடந்ததை மறப்பதற்கு தான் சிலர் குடிக்கின்றனர். சிலர் குடித்துவிட்டு போதையில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆனால் மணிவண்ணனை அவர் மதுபானம் குடித்துவிட்டு போதை ஏறிய நிலையில் காரல்மார்க்ஸ் ஏங்கல்ஸ் போன்றவர்களின் தத்துவங்கள் நிறைந்த புத்தகங்களை வாசிப்பார். பெரிய அறிவுபூர்வமான புத்தகங்களை எல்லாம் மிகவும் ஆழமாக படித்துக் கொண்டே இருப்பார். அது எப்படி போதையில் அவர் அது போன்ற புத்தகங்களை படிக்கிறார் என்பது எனக்கு புரியவில்லை. அவரது உடல்நிலை மோசமாக பாதித்ததற்கு விரைவில் அவர் இறந்து போனதற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு எப்போதுமே இருக்கிறது என்று வாகை சந்திரசேகர் அதில் கூறியிருக்கிறார்.